Category: சனாதன தர்மம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1666 ன் விளக்கம்:
“கங்காளன் பூசும் கவத் திருநீற்றை,மங்காமல் பூசி மகிழ்வரேயாம் ஆகில்,தங்கா வினைகளும் சாரும் சிவகதி,சிங்காரம் ஆன திருவடி சேர்வரே” கங்காளன் பூசும் கவத் திருநீற்றை: பொதுவாக திருநீறு என்பது பசுவின் சாணம் போன்ற ‘புறபொருட்கள்’ கொண்டு உருவாக்கும் வெண்ணீறு, எனினும் அதை நெற்றியில் பூசிய ஒரு சில மணித்துளிக்குள் அதன் ஒளி குன்றி மங்கிவிடும். ஆனால் கங்காளன் பூசும் கவச திருநீறு என்பது புறப்பொருள்கள் ஏதுமின்றி ‘அகப் பொருளால்’ மட்டுமே உருவாகும், ‘ மாசில் வெண்பொடி’ என அப்பர் பெருமான்…
