
திருக்குறள்: 948..பொருட்பால்..
அதிகாரம்: மருந்து..
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.”
நோய் நாடி..
‘நோய்’ என்பதற்கு அச்சம், பிணி என்ற பொருள்களும் உள்ளன. ஒருவர் உடலில் தோன்றும் ஏதேனும் குறைபாடு, மனதில் அச்சமாக மாறும்போதுதான் அது பிணி என்ற அனுபவமாக உருவெடுக்கிறது. அந்தப் பிணியே மேலும் ஒரு பிணி உருவாக ஏதுவாகலாம்…
எனவே, மனதில் அச்சம் எழுவதற்கு முன்பே, அந்த அச்சத்தின் தன்மையை நாடி அறிதல் வேண்டும்…
நோய் முதல் நாடி..
உடலில் ஏற்படும் குறைபாடுகளைப் பிணிகளாகக் கருதுவதற்கு முதற்காரணமாக மனதில் தோன்றும் அச்சத்தின் மூலக் காரணத்தை ஆராய்ந்து அறிதல் வேண்டும்…
அது தணிக்கும் வாய் நாடி..
அந்த அச்சத்தைத் தணிக்கும் உண்மையான வாய்மொழியையும், அதன் உள்ளார்ந்த குரலையும் அருமருந்தாகக் கண்டறிதல் வேண்டும்…
வாய்ப்பச் செயல்…
பிழையின்றி, உடலுக்கும் உள்ளத்திற்கும் பொருந்தும் வகையில், அந்த அருமருந்தை இடைவிடாது உட்கொண்டு, அச்சத்தை மனத்திலிருந்து முற்றிலும் அகற்றுதல்… ஒருவருக்குக் கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பாகும்…
இதையே அவ்வையின் மூதுரை வாக்கும் ஒரு வேறுபட்ட கோணத்தில் உணர்த்துகிறது:
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.”
அதாவது, நோய் என்று கருதுவதற்கான முதற்காரணமாகிய அச்சம் அற்ற வாழ்வே…ஒருவருக்குக் குறைவற்ற செல்வமாகிறது…
இவ்வாறு பார்க்கும்போது, வள்ளுவர் கூறும் “மருந்து” என்பது உடலுக்கான மருந்தை மட்டும் குறிப்பதல்ல…
நோயின் மூலத்தை அறிந்து.. அதன் காரணமான அச்சத்தைத் தணித்து.. உள்ளத்தின் இயல்பான அமைதியை மீட்டெடுக்கும் அருமருந்தாகவும் புரிந்துகொள்ள முடிகிறது…
வாழ்க தமிழ் 🙏
வாழ்க வள்ளுவம் 🙏

