“Ek Onkar”

When Nanak says, ‘Ek Onkar,’ he is not teaching you theology. He is giving you the direct experience of undivided reality.

Omkaram is divided into three time periods called mathiraigal. The first is the waking state, followed by the dream state and the deep sleep state, each having its own time period. In general, everyone experiences the three states of being awake, dreaming, and sleeping individually, leaving them unable to taste inseparable existence, i.e., without understanding the meaning of Pranava.

On the other hand, if a person practices the three forms of Omkara chanting that the Guru has blessed on a regular and continuous basis, the three different states of waking, dreaming, and sleeping are forgotten, and the Guru grants you a direct taste of the indivisible existence through them.
Sri Gurupyo Namah, 🙏

‘ஏக் ஓங்கர்’ என்று நானக் கூறும்போது, அவர் உங்களுக்கு இறையியலைக் கொடுக்கவில்லை. பிரிக்க முடியாத இருப்பின் நேரடி சுவையை அவர் உங்களுக்குத் தருகிறார்.

ஓம்காரம் என்பது மூன்று  கால அளவை கொண்ட மாத்திரைகளை உள்ளடக்கியது. ஒன்று விழிப்பு நிலை,, இரண்டாவதாக கனவு நிலை, மூன்றாவதாக ஆழ்ந்த உறக்க நிலை, இம்மூன்றும் தனித்தனி கால அளவுகளை தம்முள் கொண்டது. பொதுவாக ஒவ்வொருவரும், விழித்துக் கொண்டிருக்கிறேன், கனவு கொண்டிருக்கிறேன், உறங்கிக் கொண்டிருக்கிறேன் என இம்மூன்றின் கால அளவுகளை தனித்தனியே அனுபவித்து கொண்டிருப்பதால், பிரிக்க முடியாத இருப்பின் சுவையை உணர முடியாமல், அதாவது பிரணவத்தின் பொருள் அறியப்படாமலேயே இருந்து கொண்டிருக்கிறது.

மாறாக, குருவின் அருளால் கிடைக்கப் பெற்ற  மூன்று மாத்திரைகள் கொண்ட ஓங்கார உச்சரிப்பு இடைவிடாமல் முறையாக ஒருவரால் பயிற்சிக்கப்படும் போது, விழிப்பு, கனவு, உறக்கம், எனும் இம் மூன்றால்  உருவாகும் மூன்று தனித்தனி அவஸ்தைகளும் மறக்கடிக்கப்பட்டு,  அதன் மூலம் பிரிக்க முடியாத இருப்பின் நேரடி சுவையை குருவான அவர் உங்களுக்குத் தருகிறார்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment