“ஸத்யஸ்யஸத்யமிதி”-2

Kabir Das says: If you have found the truth, leave the scriptures.
கபீர் தாஸ் கூறுகிறார்: நீங்கள் உண்மையைக் கண்டுபிடித்து விட்டால், வேதங்களை விட்டுவிடுங்கள்.
எது உண்மை?  “ஸத்யஸ்யஸத்யமிதி” என்பது பிருஹதாரண்யக உபநிஷத்தில் கொல்லப்பட்டுள்ள ரகசிய நாமம் ஆகும். இதற்குப் பொருள் ‘ பிராணங்கள் ஸத்தியம் அவற்றுக்கு ஆன்மா த்தியம்’.

ஒவ்வொரு மனித உருவில் அமைந்திருக்கும் உள்ளுறுப்பும் வெளி உறுப்பும் பிராணங்களாலேயே உருவாக்கப்பட்டும், இயக்கப்பட்டும்  கொண்டிருக்கிறது. எனவே பிராணங்கள் த்தியம்.  பிராணங்களுக்கு நாபிக் கமலத்தில் குடி கொண்டிருக்கும் உயிர்வித்தாகிய ஆன்மா த்தியம். இவற்றைக் குறிக்கும் ரகசிய நாமமே “ஸத்யஸ்ய ஸத்யமிதி” என்பதாகும்.

குருவின் அருளால் இந்த ரகசிய நாமம் ஒருவருக்கு முறையாக உபதேசிக்கப்பட்டு, அது கடைப்பிடிக்கும் படும்போது, நாவினால் உச்சரிக்கப்பட்ட வேதங்கள் தாமாகவே அவரை விட்டு விலகிப் போய்விடும். அவ்வாறு இன்றி வேதங்கள் பின்னரும் தொடர்ந்து கொண்டே இருந்தால், ‘ உண்மையின் உண்மை’  உணரப்படாமலேயே போய்விடும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏