“Anticipate the unexpected instead of expecting things as you like.”

“Don’t be anxious about your future—be quiet now and all will fall in place. The unexpected is bound to happen, while the anticipated may never come.” That is the teaching of Nisargadatta Maharaj.

What is expected depends on knowledge, and knowledge depends on the object known. If knowledge is integrated with the object known, the expected outcome may occur; however, if they are not integrated, the expected outcome may never happen.

But the unexpected depends on grace beyond knowledge. When grace is revealed, knowledge and the object to be known also emerge along with it, so the unexpected will definitely happen automatically when the right time comes. For that reason, it is crucial to remain calm, as Nisargadatta Maharaj mentioned.

“நீங்கள் விரும்பியதை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக எதிர்பாராததை எதிர்பார்க்கவும்.”

உங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள்—இப்போது அமைதியாக இருங்கள், எல்லாம் தானாகவே சரியாகிவிடும். எதிர்பாராதவை நிச்சயம் நடக்கும், ஆனால் எதிர்பார்க்கப்படுபவை ஒருவேளை ஒருபோதும் நடக்காமலும் போகலாம் என்பது நிசர்கதத்த மகராஜ் அவர்களின் போதனை.

எதிர்பார்க்கப்படுபவை அறிவு சார்ந்தது, அறிவு அறியப்படும் பொருளை சார்ந்தது. அறிவும் அறியப்படும் பொருளும் ஒருங்கிணைக்கப்பட்டால்  எதிர்பார்க்கப்பட்டது நடக்கலாம், அறிவும் அறியப்படும் பொருளும் ஒருங்கிணைக்கப்படாவிட்டால், எதிர்பார்க்கப்பட்டது ஒருபோதும் நடக்காமலும் போகலாம்.

ஆனால் எதிர்பாராதது என்பது அறிவுக்கு அப்பாற்பட்ட அருளைச் சார்ந்தது. அருள் வெளிப்படும் போது அதனுடன் சேர்ந்தே அறிவும் அறியப்படும் பொருள் வெளிப்படும் என்பதால் எதிர்பாராதது என்பது தானாகவே அதற்குரிய நேரம் வரும்போது நிச்சயம் நடக்கும். அதற்கு தேவை நிசர்கதத்த மகராஜ் அவர்கள் குறிப்பிட்ட அமைதியோடு இருத்தல் என்பது மிக மிக அவசியம்.

இதையே வள்ளல் பெருமான் தம் அருட்பெருஞ்ஜோதி அகவலில்
“அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம்
மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே,
அருளறியார் தமை அறியார் எம்மையும்
பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே” என்று இயம்பியுள்ளார்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏