திருமூலர் திருமந்திரம் உரை எண் 92 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
“நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின்
நந்திஅரு ளாலே சதாசிவன் ஆயினேன்
நந்திஅரு ளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்திஅரு ளாலே நானிருந் தேனே.”


நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின்:
ஜீவனாய் விளங்கிய என் மூச்சிர்க்கும், என் மூச்சின் ஆதி மூலமாக என் நாபிக் கமலத்தில்  குடி கொண்டிருந்த சிவத்திற்கும் இடையில் மறைத்து நின்றிருந்த நந்தி, அருள் கூர்ந்து விலகினதனாலேயே,  மூலமான சிவத்தை என் ஜீவன் நாடி, பின்…


நந்திஅரு ளாலே சதாசிவன் ஆயினேன்;
நாடிய என் ஜீவனுக்கும் சிவத்துக்கும் இடையில் விலகி நின்றிருந்த நந்தி, அவ்வாறு நின்றபடியே இருந்ததின் காரணம், என் ஜீவனான ஒவ்வொரு மூச்சின் சத்தத்தின் உள்ளேயும்  மூலமான சிவமானது கூடியபடியே இருக்க,  நான் சதாசிவம் ஆயினேன்…


நந்திஅரு ளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்:
அவ்வாறு  என்றும் விலகி நின்ற நந்தியின் அருளால் சதாசிவமாகவே ஆனதால், என் ஜீவனுடன் சேர்ந்த மெய் என்னும் இவ் உடம்பின் உள்ளேயும் மூலமான பரசிவம் பொருந்தி நிற்க…


நந்திஅரு ளாலே நானிருந் தேனே:
அதுவரை  அது இது என என்றிருந்த நான், நந்தி அருளாலே நான் நானாகவே அதாவது சிவமாகவே ஆயினேன் என திருமூல நாயனார் தாம் பெற்ற அனுபூதி நிலையை இந்த திருமந்திர உரையின் மூலம் நமக்கு வெளிப்படுத்தி உள்ளார்
திருச்சிற்றம்பலம், 🙏

Leave a comment