
“Meditating on the self”
The five senses—touch, speech, sight, hearing, and smell—merge into the physical body; the physical form merges into the mind; the mind merges into the intellect; the intellect merges into the vital breath; the vital breath merges into sound; and sound merges into the luminous Purusha (the Supreme Being), the sadguru shining in the lotus of the navel. Beyond this Purusha, there is nothing else; the only way to attain the Supreme Purusha is to meditate on oneself as if one is that Supreme Purusha. This is the conclusion; this is the ultimate goal – Katha Upanishad 3.10 & 3.11

“சுயத்தை தியானித்தல்”
மெய், வாய், கண், செவி, நாசி என்னும் ஐம்புலன்களும் பிண்டம் என்னும் ரூபத்தில் ஒடுங்கும்: ரூபம் மனதில் ஒடுங்கும்: மனம் புத்தியில் ஒடுங்கும்: புத்தி முக்கிய பிராணனில் ஒடுங்கும்: முக்கிய பிராணன் சப்தத்தில் ஒடுங்கும்: சப்தம் ஜோதிர் மயமாக, சத்குருவாக, நாபிக் கமலத்தில் ஒளிரும் புருஷனில் ஒடுங்கும்:. இப்- புருஷனுக்கு அப்பால் எதுவும் இல்லை: அந்தப் பரம புருஷனை அடைவதற்கான ஒரே வழி, தன்னைத் தானே அந்தப் பரம புருஷனாக பாவித்து தியானிப்பதே ஆகும். இதுவே முடிவு; இதுவே இறுதி இலக்கு.
கடோபநிடதம் 3.10 & 3.11

