“சாக்ஷி ஹயாஸ்யோத்ரஹி”

சூனியம் உணரப்படும்போது, நானே எல்லாம் ஆகிறேன். எல்லாம் நானே; எல்லாம் என்னுடையதே. என் உடலானது, அசைவைப் பற்றிய என்  சிந்தனையாலேயே அசைவது போல, நான் நினைப்பதைப் போலவே காரியங்களும் நடக்கின்றன. ஒன்றுமில்லாத விழிப்புணர்வாக இருக்கும் நான், எந்தச் செயலையும் செய்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை நடப்பதை நான் சாட்சியாக மட்டுமே பார்க்கிறேன். -நிசர்கதத்த மகராஜ்

நிசர்கதத்த மகராஜ் குறிப்பிடும் ஒன்றுமில்லாத விழிப்புணர்வை உணர்வதற்கு, அவர் உரைத்த படி சிந்தனை, உடல் மற்றும் செயல் இம் மூன்றும் தனித்தனியே அறியப்படும் போதுதான்,  நான் சாட்சியாக இருக்கிறேன் என்பதாகி, அதுவே ஒன்றும் இல்லாத விழிப்புணர்வாகின்றது.  ஆழ்ந்த உறக்க நிலைக்கு ஒருவர் செல்லும் முன்பு செயல், சிந்தனை, மற்றும் உடல் உணர்வு இம்மூன்றும் அடுத்தடுத்து மறையும் போது தான், அது ஒன்றும் இல்லாத, அமைதி நிறைந்த ஆழ்ந்த உறக்க நிலையாக அனுபவிக்கப்படுகிறது. அந்நிலையில் அனுபவிக்கப்பட்ட அமைதியே சாட்சி நிலையாக விழித்தவுடன் உணரப்படுகிறது.

மாறாக, இம் மூன்றையும் அறியாமையில் ஒன்றனவாக விழிப்பு நிலையில்  உணரும் போதுதான், அது ‘ நான் செய்கிறேன்:’ என்பதாகி, அதுவே என்றும் உள்ள அமைதி நிறைந்த, சாட்சியாக விளங்கும்  தூய விழிப்புணர்வை மறைத்து விடுகின்றது. எனவே சிந்தனை, உடல் அசைவு,  மற்றும் செயல் இம்மூன்றும், ஒருவரால் தனித்தனியாகவே அறியப்பட்டு கொண்டே இருந்தால், நான் செய்பவன் என்ற அறியாமை மறைந்து, நான் சாட்சியே என்ற ஞானம், ஒன்றுமில்லாத தூய உணர்வாக வெளிப்படும். முக்தி நிலை என்பதும் இதுவே எனலாம்!
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment