திருமூலர் திருமந்திரம் 2770 ன் விளக்கம்:

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

“தியானத்தின் நுட்பம்”
“நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. “

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி:
இரண்டு கண்களுக்கு இடையே, நெற்றிக்கு நேரே உள்ள புருவத்தில் விளங்கிக் கொண்டிருக்கும் இடைவெளி என்னும் ‘ ஒன்றும் இல்லாத தன்மையை’…

உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் ஊற்று, அற்று என்ற அதன் தன்மை கொண்டதாகவே, அதாவது புருவத்து மத்தியில் விளங்கும் அவ்- இடைவெளியை, அதன் தன்மையான சூனியமாகவே, ஒன்றும் இல்லாததாகவே உணர்ந்து உற்று நோக்கில், ஊன் பற்றி நின்ற உணர்வு என்னும் மந்திரம் ஆனது அவ்- இடைவெளியினுள் சூழ்ந்து, நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளியாக ஒளிரும்..

பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்:
பற்றுக்குப் பற்றாற்ப்: ஊன்றி பிடிப்பதற்கு ஏற்ற தூய உணர்வாக பரமன் என்னும் சிவம் குடிகொள்ள ஏதுவான இடமாக அது ஆகிடும்…

சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே:
அத்தகைய ஒளி பொருந்திய மந்திர பீடமாக புருவ மத்தியில் விளங்கும் அவ்- இடைவெளியையே, சிவம் நடனமாடும் திருச்சிற்றம்பலம் என அறிந்து, உணர்ந்து அதனுடன் இரண்டறக் கலந்தேனே!
திருச்சிற்றம்பலம், 🙏

Leave a comment