“குரு ஸ்துதி”-3

“குரு ஸ்துதி”
நீங்கள் மனதின் மூலத்தைத் தேடினால், அப்போதுதான் எல்லா கேள்விகளுக்கும் தீர்வு கிடைக்கும். – – ரமண மகரிஷி

ஆனால் ஈசோபனிஷத் மந்திரம் 4 கூறுகிறது, ஸ்ரீமன் நாராயணன் தனது இருப்பிடத்தில் நிலை பெற்றிருந்தாலும், அவர் மனதை விட வேகமானவர், ஓடும் மற்ற அனைத்தையும்  அவரால் முந்த முடியும். சக்திவாய்ந்த தேவர்களாலும் மனதின் மூலம் அவரை அணுக முடியாது என்று,

அவ்வாறெனில் எவ்வாறு ஒருவர் மனதின் மூலத்தை அடைய முடியும்?  மனம் என்னும் இடைவிடா எண்ணங்கள் தோன்ற ‘Space’ எனப்படும் ‘வெளி‘ தேவை. இஃதின்றி எவரொறுவருக்கும் எண்ணங்கள் எழவே எழாது. எண்ணங்கள் தோன்ற மூலகாரணமாக இருக்கும் ‘வெளி ‘ எனும் ‘Space’ என்பதே ஆத்ம ஸ்வரூபமாக விளங்கும் ஸ்ரீமன்நாராயணனின் இருப்பிடமாகும். இவ் ஆத்ம ஒளியில் தான் உருவமற்ற மனதின் பிரதிபலிப்பும் அம்–மனத்தின் உருவகமாக பஞ்சபூத சம்பத்துடன் கூடிய இவ்வுருவமும் காட்சிப் பொருளாகிறது.

यः मम शब्द प्राण शरीर ज्ञान आकारं अस्ति,
तं गुरुं मम ईश्वर आत्मानं इति मत्वा प्रणमामि ।।
யா: மம சப்த பிராண சரீர ஞான ஆகாரம் அஸ்தி,
தம் குரும் மம ஈஸ்வர ஆத்மானம் இதி மத்வா பிரணமாமி 🙏

யார் என் சப்தம், மனம், பிராணன், மற்றும் என் உடல் வடிவமாக இருக்கிறாரோ, அந்த ஸ்ரீமன் நாராயணனையே என் குருவாகவும், என் இறைவனாகவும், நானாகவும் (என் இருப்பாகவும்)  கருதி வணங்குகிறேன் என்ற இடைவிடாத குரு ஸ்துதியின் மூலம் மனதின் மூலத்தை அடையும்போது, எல்லா கேள்விகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏

Leave a comment