“குரு ஸ்துதி” -2

யார் என் வார்த்தை, பிராணன், உடல், அறிவு, வடிவம் ஆக இருக்கிறாரோ,
அவரையே என் ஆன்மீக குருவாகவும், என் இறைவனாகவும், நானாகவும் கருதி வணங்குகிறேன்.🙏

அந்த ‘நான்’ என்பதே சிவனின் நாமம் என்பது யஜுர் வேத வாக்கு. “குருவே சிவமெனக் கூறினன் நந்தி” என்பது திருமூலரின் திருமந்திர உரை. அவ்வாறெனில் எவ்வாறு ‘நான்’ என்பது என் உருவத்திற்கு அன்னியமாக வெளிப்படாதோ, அவ்வாறே ‘ சிவம்’  என்பதும் என் சப்தம், பிராணன், சரீரம் மற்றும் அறிவின் சொரூபமாக விளங்கும் குருவிற்கு அன்னியமாக, அதாவது என் உருவத்தில் இருந்து வெளிப்படும் ‘நான்’ என்பதற்கு அன்னியமாக இல்லை.

‘குரு கடவுள் ஆன்மா’ மூன்றும் ஒன்றே என்பது பகவான் ரமண மகரிஷியின் அனுபவ சித்தாந்தம். அவ்வகையில் என் சப்தம், பிராணன், சரீரம் மற்றும் அறிவின் சொரூபமாக விளங்கும் குருவே- சிவமாகவும்- அதுவே நான் (ஆன்மா) என்பதாகவும் இடைவிடாது என் உருவ வெளியுள் இருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்ற விழிப்புணர்வு உணரப்படும் போது வெளிப்படும் வெட்ட வெளிக்குள், அதாவது ஜோதியுள், குரு, சிவம், என் உருவம்  இம்மூன்றும் மறைந்து ஜோதியுள் ஜோதியாக கலந்து விடும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment