
यः मम शब्द प्राण शरीर ज्ञान आकारं अस्ति,
तं गुरुं मम ईश्वर आत्मानं इति मत्वा प्रणमामि ।।
யா: மம சப்த பிராண சரீர ஞான ஆகாரம் அஸ்தி,
தம் குரும் மம ஈஸ்வர ஆத்மானம் இதி மத்வா பிரணமாமி 🙏
யார் என் வார்த்தை, பிராணன், உடல், அறிவு, வடிவம் ஆக இருக்கிறாரோ,
அவரையே என் ஆன்மீக குருவாகவும், என் இறைவனாகவும், நானாகவும் கருதி வணங்குகிறேன்.🙏
Who is my word breath body knowledge shape,
I bow down to him as my spiritual master, my Lord and myself.🙏
மானுட வடிவம் கொண்ட ஒவ்வொரு உருவமும் உருவமற்ற ஓர் அணுவிலிருந்து தோன்றியவே. இவ் வடிவம் மறைந்த பின்னர், அதாவது மரணத்திற்குப் பிறகு மீண்டும் தன் உருவமற்ற தன்மைக்கு மாறி விடுகிறது.
“நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம …… வெகுகோடி”
நாத விந்துக லாதீ நமோநம:
என்று அருணகிரிநாதர் தம் திருப்புகழில் பாடியபடி, அந்த உருவமற்ற நாதமும் விந்துவும், அதாவது நாதம் என்ற ஒலியும், விந்து என்ற ஒளியும் கலந்து மானுட உருவம் எடுத்த பின, அது வணங்கத் தக்க தெய்வம்சம் கொண்டதாக ஆகிறது.
வேத மந்த்ரசொ ரூபா நமோநம:
“வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.” என்று ஞானசம்பந்தப் பெருமான் தேவாரத்தில் பதிகத்தில் உரைத்தபடி, நாதம் என்பது “சிவாய நம” என்னும் பஞ்சாட்சர மந்திர சப்தமாக, நாதமாக இதுவே நாதமும் விந்துவும் கலந்து உருவம் எடுத்த ஒவ்வொரு மானுட வடிவத்திலும் ஒலிக்கும் போது, அது வேத மந்த்ர சொரூபமாக ஆகி, வணங்கத் தக்க தெய்வம்சம் கொண்டதாக ஆகிறது.
ஞான பண்டித ஸாமீ நமோநம:
இந்த வேத மந்திரம், மானுட சொரூபத்தில் ஒலிக்க ஒலிக்க, அந்-நாதத்தோடு கலந்த விந்துவின் மூலம், அறிவாகிய ஒளி தூண்டப் பெற்று, ஞான பண்டிதனாக ஆகிய ஒவ்வொரு மானுட வடிவும், ஸாமீயாக, வணங்கத் தக்க தெய்வம்சம் கொண்டதாக ஆகிறது.
வெகுகோடி:
இத்தகைய வணங்கத்தக்க, தெய்வம்சம் பொருந்திய, சப்த, பிராண, சரீரம் கலந்த மானுட வடிவத்தை பெற்று ஞான பண்டித ஸாமீ ஆனவர்கள் வெகு கோடியில் ஒருவரே!
இவ்வாறு வணங்கத்தக்க ஞான பண்டித ஸாமீ ஆகாத ஏனையவர்கள் மீண்டும் உருவமற்ற தன்மைக்கும், வேறு உருவம் கொண்டதாகவும் மாறி மாறி போய்க் கொண்டே இருப்பார்கள்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

