“Sita is beyond touch.”

“சீதை தொடுதற்கு அப்பாற்பட்டவள்”
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

1, வால்மீகி ராமாயணத்தில்- ராவணன்  சீதையை தொட்டு தூக்கிச் சென்றான் என்றும்,
கம்பராமாயணத்தில்-ராவணன் சீதை இருந்த நிலத்தை அப்படியே பெயர்த்து எடுத்து சென்றான் என்றும்,  ஏனெனில் நளகுபாரன் கொடுத்த சாபத்தால், அனுமதியில்லாமல் எந்த பெண்ணை தொட்டாலும் தன் தலை சுக்குநூறாகிவிடும் என்பதால்…
இந்த இரு வேறு காட்சிகளை பொருள் படுத்தி அதைப் பற்றிய ஒரு கருத்து…

2, ராமாயணக் காலம் த்ரேதாயுக காலம், சாபம் கொடுத்தால் 100% பலிக்கக்கூடிய காலம் அது. அவ்வாறானால் வால்மீகி தம் ராமாயண காவியத்தில் குறிப்பிட்டுள்ளபடி ராவணன் சீதையை அனுமதி இல்லாமல் தொட்டு தூக்கியபோது, அக்கணமே அவன் தலை வெடித்து சுக்கு நூறாக ஆகி இருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு நிகழவில்லை.

3, அதுபோன்று வால்மீகி மகரிஷியால் எழுதப்பட்ட இராமாயணம் மூல ராமாயணம், ஸ்ரீ ராமபிரான் வாழ்ந்த காலத்திலேயே எழுதப்பட்டு ராமர் முன்னிலையிலே ராமரின் புத்திரர்கள் மூலம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமை கொண்டது. மேலும்  இதன் மூல கதாபாத்திரமான சீதையும் வால்மீகி மகரிஷி ஆசிரமத்திலேயே  தங்கி இருந்ததால் அவளும் இந்த ராம காவியத்தை பற்றி அறிந்திருக்க கூடும், மறுப்பு ஏதும் இல்லை என்பதால் வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயண காவியத்திலும் தவறு ஏதும் இருக்க முடியாது

4, அதாவது சீதையை ராவணன் தொட்ட  பின்னரும் நளகுபாரன் கொடுத்த சாபம் அங்கு பலிக்கவில்லை, வால்மீகி மகரிஷி  எழுதிய மூல ராமாயணத்திலும் தவறு ஏதும் இருந்திருக்க முடியாது என்றால், மூன்றாவதாக உள்ளதாக கருத வேண்டியது சீதாப்பிராட்டியே, தன்னை தூக்கிச் செல்ல அனுமதித்ததால் தான் ராவணனுக்கு ஒன்று நிகழாமல் இருந்திருக்க வேண்டும் என்பதாக யூகித்துக் கொண்டு, அப்படி என்றால் அத்தகைய அனுமதி எந்த ரீதியில் இருந்திருக்க கூடும் என்பதை பற்றிய ஒரு சிறிய ஆராய்வு.

5,  சீதாப்பிராட்டி  பிராண சக்தியாக விளங்கும் சைதன்ய சொரூபம். சைத்தன்யம் refers pure consciousness or sprit. அதுபோன்று  மூல ராமர் என்பதில் ‘ரா’ என்பதற்கு சமஸ்கிருதத்தில் பிரகாசமான ஜோதி என்றும், ‘அமர்’ என்பதற்கு immortal அழியாத் தன்மை என்றும் பொருள் உள்ளது. அதாவது ‘ரா அமர்” என்பது அழியாத பிரகாசமான ஜோதியை குறிப்பது அதுவும் சைதன்ய சொரூபமே. சீதையும் சைதன்ய சொரூபமே, எனினும் இவ்விரண்டு சைத்தன்யங்களும் வெவ்வேறு அல்ல.

6, இதையே திருமூலரும் தம் திருமந்திர உரையில்   ” ஒன்றும் இரண்டும் ஒருங்கிய  காலத்து”  என்று இவ்விரண்டு சைதன்ய தத்துவங்களும் ஒன்றே என்பதை தம் கருத்தாக  வெளிப்படுத்தி உள்ளார், ஒருங்கிய என்பதற்கு ஒன்றாகுதல் புணர்தல் என்று பொருள்கள் உள்ளது. அதன் படி, vital energy ஆக பிரகாசிக்கும் மூல ராமரும், அதிலிருந்து பிராண சக்தியாக வெளிப்பட்ட சீதா பிராட்டியும் பிளவு படாத, கண்களுக்கு புலப்படாத, ஸ்பரிசம் என்னும் தொடுதல் உணர்வுக்கு அப்பாற்பட்டு விளங்கும் ஒரே சைதன்ய சொரூபமே,  

7, அவ்வாறு சைதன்ய சொரூபமாக விளங்கும் சீதா பிராட்டியை, அதே சைதன்ய சொரூபமான ஸ்ரீ ராமர் ஒருவரை தவிர வேறு எவராலும்  உண்மையில் தொட முடியவே முடியாது.

8,, இந்தச் சைதன்யமானது அவதார நோக்கத்தோடு தன்னைத் தானே நாம ரூபமாக வெளிப்படுத்திக் கொள்ளும் போது, அது பெண் உருவம்  கொண்ட சீதாப்பிராட்டியாகவும், ஆண் உருவம் கொண்ட ஸ்ரீ ராமனாகவும், அதாவது கண்களுக்கு புலனாகாத சைதன்யம், நாம ரூபம் கொண்டதாக, காணக்கூடியதாக, தொடக்கூடியதாக  தன்னைத்தானே வெளிப்படுத்திக்  கொண்டுள்ளது.

9, இதில் சீதையின் சக்தி மிகவும் விசேஷமானது, அவள் விரும்பும் போது தன்னை body consciousness அதாவது தன் உடல் உணர்வுடன் இணைத்துக் கொள்ளவும், அதுபோன்று   அதே உடல் உணர்வில் இருந்து  தன்னை விடுவித்துக் கொண்டு தன் உடம்பையே  ஜட வஸ்துவுக்கு ஒப்பாக ஆக்கிக் கொள்ளவும், மேலும் ஒரு ஜட வஸ்துவுக்கு தன் முழு உணர்வையும் transfer பண்ணக்கூடிய ஆற்றலும் தமக்கு உள்ளதை சீதை மூன்று வெவ்வேறு இடங்களில்  வெளிப்படுத்தியும்  காட்டியுள்ளாள்.

10, சீதா பிராட்டிக்கும் ராவணனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை பற்றி நன்கு தெரியும். ஆதலால், ராவணன் தன்னைத் தூக்கிச் செல்ல முயன்ற  அக்கணமே தன்னைத்தானே உடல் உணர்விலிருந்து, அதாவது body consciousness என்பதிலிருந்து விடுவித்துக் கொண்டு தம் உடம்பையே  ஜட வஸ்துவுக்கு ஒப்பாக ஆக்கிக் கொண்டு, அதன் மூலம் ராவணன் தன் உடம்பை தொட்ட போதும் தான் தொடப்படாதவளாகவே,  அதாவது Untouchability in nature ஆகவே இருந்ததினால்…

11, Next ,இது சாத்தியமா என்று ஒரு கேள்வி எழுந்தால்? நம் உடம்பில் உள்ள வளர்ந்த நகங்கள் தலைமுடி போன்றவைகளை பிடித்து இழுத்தால் வலிக்கும் ஆனால் வெட்டப்படும் போது நாம் எந்த வலி வேதனையையும் உணர்வதில்லை, ஏனெனில் வெட்டப்படும் நகமும், முடியும் அவைகளின் மூல உணர்வுகளோடு  தொடர்பு கொள்ளாமல், dead  cell ஆக உள்ளதால்… அதாவது நம் உடம்பிலேயே உள்ள உணர்வுள்ள நகமும், முடியும் உணர்வற்றதாகவும் மாற முடியும் என்றால் ஏன் சீதையால் தன் தேகத்தையே உணர்வற்றதாக ஆக்கிக் கொள்ள முடியாது ?

11.1 அதுபோன்று, மற்றொரு எடுத்துக்காட்டாக பகவான் ரமண மகரிஷிக்கு ஒரு சமயம் கையில் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்த போது எந்த மயக்கம் மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் வலி வேதனையை பற்றி உணர்வு ஏதும் இல்லாமல் தனக்கு அந்நியமாக தன் கையே அறுவை சிகிச்சை நடக்கும் போது பார்த்துக் கொண்டிருந்ததாக அவரது வாழ்க்கை வரலாற்று குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

12. அது போன்று  ராவணன் தம்மை தொட முயன்ற அக்கணமே,  சீதை தன் உடல் உணர்வை கடந்து,  தம்மை தொடப்படாதவளாகவே ஆக்கிக் கொண்டதால்தான்… இராவணனுக்கு கொடுக்கப்பட்ட  சாபம் பலிக்காமல் போய்விட்டது.  சீதை மட்டும் அவ்வாறு செய்யாமல் போயிருந்தால் அக்கணமே ராவணனின் தலை வெடித்து சுக்குநூறாக ஆயிருக்கும். 

12.1 ஆனால் அவ்வாறு மட்டும் நிகழ்ந்திருந்தால் , சீதாராமனின் அவதார நோக்கம் முழுமை பெற்றிருக்காது. அதாவது சபரி மோட்சம், ராமபிரானுடன் அனுமன் சந்திப்பு, சுக்ரீவன் நட்பு, வாலி வதம், விபீஷண சரணாகதி, விபீஷண பட்டாபிஷேகம், இந்திரஜித் வதம், கும்பகர்ணன் வதம் போன்ற அடுத்தடுத்த நிகழ்வுகள்  நடைபெறாமலேயே போயிருக்கும்.

12.2 ராவண வதம் முடிந்து  சீதை தன் கற்பை நிரூபிக்க  அக்னி பிரவேசம் செய்ய நேர்ந்த போது, அச்சமயத்தில் தன்னை  உடல் உணர்வோடு   இணைத்துக்  கொண்டுதான் அக்னி பிரவேசம் செய்வாள். எனினும் அக்கினியால் கூட சீதையின் தேகத்தை தொட முடியாமல் போக , அக்னி பகவானே சீதையை ராமனிடம் திருப்பி ஒப்படைத்ததாக ராமாயண காவியத்தில் இருக்கிறது.  அப்பொழுது  அக்னி பகவானால் கூட தொட முடியாத சீதையை, ராவணன் தன் மனதால் கூட தொட  முடியாது என்பதை தாம் அறிவோம் என்று, ஸ்ரீ  ராமபிரான் தம் திருவாக்கின் மூலம் உலகத்திற்கு வெளிப்படுத்திய நிகழ்வு அது.

12.3 எனினும் தம் அவதார நோக்கத்தை அறிந்த சீதை,  தன் உடம்பை  ஜட வஸ்துவுக்கு ஒப்பாக ஆக்கிக் கொண்டு அதன் மூலம் தாம் தொடுதற்கு அப்பாற்பட்டவள் என்னும் தன்மைக்கு  மாறிக்கொண்டு,  மறைமுகமாக  ராவணன் தம்மை தூக்கிச் செல்ல அனுமதி அளித்ததினால் தான் இராவணனால் அவ்வாறு செய்ய முடிந்தது என்பதாக யூகத்துக்கு பொருள் கொண்டு…

13, இதை வால்மீகி மகரிஷியும் அறிந்திருப்பார் என்பதினால் ராவணன் சீதையை தூக்கிச் சென்றான் என்று எழுதி இருக்க வேண்டும்,
அதுபோன்று கவிச்சக்கரவர்த்தி கம்பரும் இதை அறிவார். எனினும்  சீதாப்பிராட்டி பூமியிலிருந்து பூமியின் அம்சமாகவே தோன்றியவள் என்பதால், அவளே ஜட வஸ்துவாக மாறிய பின்னர், சீதை நின்ற நிலமும் ஜடவஸ்துவே என்பதாக கருத்தில் கொண்டு,  நிலத்தோடு சேர்த்து சீதையை தூக்கிச் சென்றதாக தம் கம்பராமாயணத்தில்,   எழுதி இருக்க வேண்டும்.

14. அதாவது இந்நிகழ்வை பற்றி வால்மீகி மகரிஷியும் கவிச்சக்கரவர்த்தி கம்பரும் கருத்துக்களில் எந்த வேறுபாடும் கொண்டிருக்கவில்லை, மாறாக எடுத்துரைத்த  விதத்தில் தான் வேறுபாடு கொண்டுள்ளனர்.  U
ராம் ராம் 🙏

Leave a comment