திருமூலர் திருமந்திரம் உரை எண் 2715 ன் விளக்கம்:

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
“சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்,
சிவசிவ வாயுவும் தேர்ந்து உள்ளடங்கச்,
சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள்,
சிவசிவ ஆகும் திருவருள் ஆமே.”

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்: சிவசிவ என்ற சிவாய நாமத்தை இடைவிடாது உச்சரித்தும் எந்த தெளிவையும் பெற  முடியாதவர்கள், பேச்சிருந்தும்  பேச முடியாத ‘ஊமர்’ என்னும் ஊமைக்கு ஒப்பானவர்கள்…

சிவசிவ வாயுவும் தேர்ந்து உள்ளடங்கச்: தேர்ந்து: என்பதற்கு செயல் கைகூடும் வகையறிந்து என்று பொருள் உள்ளது. அதாவது சிவ சிவ என்னும் சிவாய  நாம சப்தமும், வாயும், ஒன்றோடு ஒன்று கைகூடி  இரண்டற கலக்கும் செயல்வகையை குருவருளால் அறியப்பெற்று,  அதை தம்- உள் பிராணனாக உள்ளடங்கச் செய்து ஓதுபவர்கள்…
சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள்: ஆய: என்பதற்கு  நுண்மை என்று பொருள் உள்ளது. அதாவது நுண்மையான அணுவுனுள் அணுவடிவாக தம் உள்ளிருக்கும் ஆதிபிராணை அணுக வல்லவர்களாகி, அதன் மூலம் சிவ சிவ என்னும்  மந்திரத்தின்  பொருளான தூய உணர்வினை தம்முள் உணர்ந்து தெளிவடைவார்கள்…
சிவசிவ ஆகும் திருவருள் ஆமே: இவ்வாறு  உணர்ந்து தெளிவடைந்தவர்களுக்கு, குருவருளுடன்,  திருவருளும் கைகூடி, சிவ சிவ என்னும் நாமத்தின் ரூபா ரூபமாகவே அதாவது உருஅருவாகவே ஆகிவிடுவார்கள்.
திருச்சிற்றம்பலம், 🙏

Leave a comment