ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

“இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்குஇல்லை
அவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியில்?
அவனுக்கு அவன்இல்லம் என்றுஎன்று அறிந்தும்
அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே”
“இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்குஇல்லை :
இல்லம்: என்பதற்கு வீடு மற்றும் மனைவி என்று பொருள்கள் உள்ளது. எத்துணை இல்லங்கள் இருந்தாலும், ஒருவனாகிய இவனுக்கு இவன் மனைவி அங்கு இல்லை என்றால், எவ்வாறு அவனுக்கும் அங்கு வீடு என்பது இல்லையோ….
அவ்வாறே எத்துணை கோவில்கள் இருந்தாலும் “உள்ளம்” என்பது அங்கு இல்லை என்றால் இறைவனுக்கும் அங்கு இல்லம் என்பது இல்லை.
அவனுக்கும் வேறுஇல்லம் உண்டா அறியில்?
மனித உருவங்கள் பலவாக தோன்றினாலும் உள்ளம் என்பது ஒன்றே ஆதலால், இறைவனுக்கும் பெரும் கோயிலாக விளங்கும் உள்ளத்தை தவிர வேறு இல்லம் உண்டா என்று அறியில்?
அவனுக்கு அவன்இல்லம் என்றுஎன்று அறிந்தும்:
அவனுக்கு: இறைவனுக்கு அவன் குடி கொண்டிருக்கும் உள்ளமே, என்றுஎன்று: என்றைக்கும் , எந்நாளும் , எப்போதும் உள்ளமே சிவனின் இல்லமாக இருக்கிறது என்பதை அறிந்திருந்தும்…
அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே:
இறைவன் தன் உள்ளத்திற்கு புறம்பாக உள்ளான் என்றே கருதி, அவன் அருளை வேண்டி நாள்தோறும் அரற்றுகின் றாரே:
திருச்சிற்றம்பலம், 🙏

