
“கற்றாரைக் கற்றாரே காமுறுவர்”
“It takes a wise man to discover a wise man.” -Diogenes (412–323 BC) was a Greek philosopher.
.”ஒரு ஞானியைக் கண்டுபிடிக்க ஒரு ஞானி தேவை.” – டயோஜெனெஸ் இவர் (கிமு 412 – 323)ல் வாழ்ந்த ஒரு கிரேக்க தத்துவஞானி.
“கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” என்பது டயோஜெனெஸின் மேற்கோளைப் போன்று, அவ்வையார் எழுதிய ‘மூதுரை’ புத்தகத்திலிருந்து ஒரு பழமொழி.
இங்கு கற்றாரை: என்பது ,’கற்க கசடற’ என்ற வள்ளுவர் பெருமானின் கூற்றின்படி, கசடு நீக்கிய ஞானக் கல்வியை கற்க முற்படுபவர்களையே குறிக்கின்றது. “தாகம் உள்ளவன் தணிக்கப்படுவான்” என்ற பைபிளின் கோட்பாட்டின்படி, இத்தகைய ஞான கல்வியை கற்க முற்படுபவர்களை…
கற்றாரே: அவ்வாறு அத்தகைய கல்வியை கற்றுத் தேர்ந்தவர்களால் மட்டுமே அறிந்து, அரவணைத்துக் கொண்டு தாம் கற்ற கல்வியை அவர்களுக்கும் கற்பிக்க இயலும்.
மாறாக, இத்தகைய மெய்ஞான கல்வியை கற்க முற்படுபவர்களை அறிந்து கொள்ள தேவையான கசடு நீக்கிய கல்வியை கற்றறியாத ஏனையவருக்கெல்லாம், ‘கற்றாரை’ என்னும் இக்கல்வியை கற்க முற்படுபவர்கள் வெறும் கேலிப் பொருளாகவே தென்படுவார்கள் என்பதாக இதற்கு பொருள் கொள்ளலாம்..
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

