திருவள்ளுவர் vs. ஸ்ரீ கிருஷ்ணன்

திருவள்ளுவர் vs. ஸ்ரீ கிருஷ்ணன்

“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.”
குறள் 466: பொருட்பால்

எது செய்யதக்கது அல்ல?

பகவத்கீதை: அத்.4, ஸ்லோகம்.29 & 30 ல், 29.அபான வாயுவில் பிராணனையும், பிராணவாயுவில் அபானனையும்  ஆகுதி செய்யும் பலர் பிராண அபான வாயுக்களின் போக்கைத் தடுத்து, அதன் மூலம் வள்ளுவர் மொழிந்த படி, செய்யத் தகாத பிராணாமயத்தை செய்வதின் மூலம் உடம்பும் மனமும் கெட்டு,  இறுதியில் மரணம் என்னும் படுகுழியில் விழுகின்றனர்.

எது செய்யத்தக்கது?
30.முறையாக உண்பவர் வெகு சிலர் பிராணனில் பிராணனை படைத்து, அதன் மூலம் வள்ளுவர் மொழிந்த படி, செய்யத்தக்க பிராணாமயத்தை செய்து,  உடம்பையும் மனதையும் காத்து, அழிவற்ற  பெரு நிலையை அடைகிறார்கள்.

அதாவது ஒருவர் பிராண அபான வாயுக்களின் போக்கைத் தடுக்கும் செய்யக்கூடாத செயலை செய்தாலும் கெடுவார், அதுபோன்று பிராணனில் பிராணனை முறையாக படைக்கும் செய்யக்கூடிய செயலை செய்யாமல் விட்டாலும் கெடுவார் என்னும் பொருள்பட,  வள்ளுவர் பெருமான் ஸ்ரீ கிருஷ்ணனின் கீதோ உபதேசத்தோடு பொருந்தும் வகையில் இக்குறளை மனித குலத்திற்கு வழங்கி உள்ளார்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment