ஆன்ம உணர்தலுக்கு குரு அவசியமா?

ஆம். குரு அவசியம், ஆனால் குரு வெளியே இல்லை. உண்மையான குரு ஆத்மா தான். வெளிப்புற குரு உங்கள் சொந்த ஆன்மாவிற்கு மட்டுமே உங்களைத் திருப்பி அனுப்புகிறார். – பகவான் ரமண மகரிஷி உபதேசம்.

எவ்வாறு வெளிப்புற குரு ஒருவரை தனது சொந்த ஆன்மாவை நோக்கி திருப்பி அனுப்புகிறார்?

மனம், பிராணன் இவ்விரண்டும் ஆத்மாவிடமிருந்து ஒரே சமயத்தில் உதயமானவைகள். மனம் அடங்கினால் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கினால் மனம் அடங்கும் என்பதும் ஶ்ரீ ரமண பகவான் உபதேசம். மேலும் எல்லா பிராணங்களும் சப்தங்களோடு பொருந்தியே தான் இயங்கிக் கொண்டிருக்கும் என்பதும் ஓர் விதி, எனினும் ஆத்மாவோடு பொருந்தும் சப்தம் வேறாகவும் வெளி உலகத்தோடு பொருந்தும் சப்தம் வேறாகவுமாக அது இயங்கிக் கொண்டிருக்கிறது.

அவ்வகையில் ஒருவரை அவரது ஆத்மாவை நோக்கி திருப்புதல் என்பது, அத்தகையவரின் பிராணனை, ஆத்மாவோடு பொருந்துவதற்குரிய முறையான சப்தத்தோடு… இணைத்து, அதன் மூலம் அலைபாயும் அவரது மனத்தையும் உள்நோக்கித் திருப்பி நிலை நிறுத்தும் திறன் கொண்ட வெளிப்புற குருவாக விளங்குபவர் எவரோ, அவரே அத்தகையவரின் ஆத்ம குருவாகவும் உள்நின்று பிரகாசிப்பார்! ஸ்ரீ ரமண மகரிஷியின் உபதேச சாராம்சம் இதுவே ஆகும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment