
“இளமையில் கல்” என்பது ஔவையார் எழுதிய ஆத்திசூடி நூலில் வரும் ஒரு வரி. இதன் பொருள் ஒருவர் தம் இளமைக் காலத்திலேயே கற்க வேண்டியது கற்க வேண்டும் என்பதாகும். ஆனால் தற்காலத்தில் அனேகர் தங்கள் இளமைக் காலம் கழிந்த பின்பும் கற்று அதனால் உலகியல் பயனும் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள். எனவே இளமையில் கல்’ என்னும் அவ்வையாரின் சொல் தற்காலத்திற்கு பொருந்தாது எனலாம்!
ஆனால் அவ்வையார் சொன்ன “கல்” என்னும் கற்கக்கூடிய மெய்ஞான கல்விக்கு, உடம்பில் உள்ள ஆதார சக்தியாய் விளங்கும் விந்து சக்தி மிக மிக அவசியம். இளமையில் உடல் முழுவதும் வியாபித்திருக்கும் அச் சக்தியை கொண்டு ஒருவர் இக்கல்வியை கற்றாள், மரணத் தருவாயில் இளமையில் கற்ற அக்கல்வி, “பிரக்ஞானம் பிரம்மம்” என்னும் வேத மகா வாக்கியமாக, அதாவது பிரக்ஞை என்ற அறிவுணர்வு கொண்ட சக்தியாக உடனிருந்து காக்கும். காஞ்சி மகா பெரியவரும் “காமம் உள்ளே போகும் முன்,காயத்ரி என்னும் சக்தி மந்திரமாக உள்ளே போக வேண்டும்” என்று தம் உபதேசத்தில் சொல்லி உள்ளார். ஆகவே ஆண் பெண் என்னும் இருபாலருக்கும் பொருந்தும் வகையில் இளமையில் கல்’ என்னும் அவ்வையாரின் சொல், எக்காலத்தும் “கற்பெனப்படும் சொல் திறம்பாமை” ஆகும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

