“The Inverted tree”

அபிராமி அந்தாதி பாடல் 2:
பனி மலர்ப் பூங்கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் அணையும், திரிபுர சுந்தரி:

குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மென்மையான பாசமும், அங்குசமும், கையில் கொண்டு விளங்கும்  மூவுலகிலும் மிகச் சிறந்த அழகியான அன்னை திரிபுர சுந்தரி…

“துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும்:
உற்ற துணையாக, இடைவிடாது தொழும் தெய்வமாக விளங்கி, இறுதி மூச்சு அடங்கி பூமியில்  அடக்கமான பின்பும், பூமாதேவியாக பெற்ற தாயாக விளங்கி அத்தேகத்தை  தம்முள் காத்து, அதை அமரத்துவம் பெற்ற தேகமாக ஒளிரும் படி அருளுவாள்,  யாருக்கு எனில்?

“சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும்” 
ஸ்ருதி- என்னும் வேதங்களாக, பனையும் -வேதங்களின் கிளைகளாக,  கொழுந்தும்,- வேதங்களின் இலைகளாக,  பதிகொண்ட வேரும்- பதி என்பது குரு அல்லது இறைவன் என்று பொருள்   மேல்நோக்கி வளரும் வேர்கள் கொண்ட அழிவற்ற அச்வத்த மரமாக தம் மனுஷ ரூபம் வெளிப்பட்டுள்ளதை குரு அருளால் அறிந்தவனுக்கே, “துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயுமாக”  இருந்து அருள்புரிவாள்.

“மேலே வேரும் கீழே கிளைகளும் கொண்ட அழிவற்ற அச்வத்த மரம் என்று என்னை அறிய. வேதங்கள் அதன் இலைகள், இதை அறிபவனே வேதத்தை அறிந்து  அழிவற்ற தன்மையை எய்துகிறான்” என்று பகவத் கீதை அத்தியாயம் 15: ஸ்லோகம் 1 ல்,  ஸ்ரீ கிருஷ்ணரும் இவ்வாறே உபதேசத்துள்ளார்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment