
“விழிக்கே அருளுண்டு” இது அபிராமி அந்தாதியின் 79 வது பாடலின் உள்ள வரிகள். இதைப் பாடும் போது தான் பூரண அமாவாசை தினமான அன்று இரவில் வானில் நிலவின் ஒளி வெளிப்பட்டது என்று ஒரு கருத்து உண்டு.
தெய்வ அருள் மற்றும் குருவருள் என்பது விழியில் இருந்து தான் பிறக்கும். விழி என்றால் பௌதிக அடிப்படையில் உருவான வழி அல்ல. அது பார்வைக்குள் ஒரு பார்வையாக இருக்கும். அத்தகைய அருள் பார்வை ஒருவருக்கு கிட்டினால்! அது அத்தகையவரின் அகம் காணும் பார்வையாக, அகத்தில் உள்ள ஆன்ம ஒளியை காணும் பார்வையாக மாறும்.
அபிராமி பட்டருக்கு அபிராமி அன்னையால் கிட்டிய அத்தகைய அருள் பார்வை, அவர் அகம் காணும் பார்வையாக , அவரின் உள்ளிருந்து ஆன்ம ஒளியாக ஒளிர்ந்து கொண்டிருந்த அபிராமி அன்னையின் ஒரு துளி ஒளிச் சிதறல்தான் வானில் நிலவொளியாக தோன்றியது.
“ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில்” என்று திருமூலரும் தன் திருமந்திரத்தில் அன்னை அபிராமியாகிய பராசக்தி ஒவ்வொருவரின் அகத்தில் ஆன்ம ஒளியாகவே அமர்ந்திருப்பதாக சுட்டிக் காட்டி உள்ளார்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

