
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
அபிராமி அந்தாதி பாடல் 69 ன் விளக்கம்:
“தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே”.
ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும்: எவரொருவர் மனதிலும் உற்சாகமும் தளர்வும் மாறி மாறி இருந்து கொண்டே தான் இருக்கும். தளர்வு என்பதே ஒரு நாளும் அறியாத மனதில் தான் உற்சாகம் என்பதும் தொடர்ந்து இடைவிடாது இருக்கும், அதன் காரணம் தெய்வத்திற்கு ஒப்பான தேஜஸ் அத்தகையவர் முகத்தில் இருந்து வெளிப்படும். இதற்கு தெளிந்த அறிவை வழங்கக்கூடிய மெய்ஞான கல்வியும், தர்மத்திற்கு முரண்படாத தனமும்,
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்: உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வஞ்சகம் இல்லாத நெஞ்சை உடையவர்களின் சத்சங்கமும், மற்றும் நல்லன எல்லாமும்…
அன்பர் என்பவர்க்கே தரும்: அபிராமியின் கடைக்கண் பார்வையால், அவளிடமே மாறாத அன்பு கொள்ளும் பெரும் பேற்றினைப் பெற்ற அன்பர் என்பவர்க்கே இவைகள் அனைத்தும் கிட்டும்.
ஓம் சக்தி 🙏

