
*கலையாத கல்வியும், குறையாத வயதும்”. இது அபிராமி பட்டர் அபிராமி அன்னையிடம் வைத்த விண்ணப்பம்.
பொதுவாக இயற்கையில் ஒருவரின் வயது என்பது வளர்ந்து கொண்டேதான் போகுமே தவிர, வயது குறையாது. அவ்வாறெனில் அபிராமி பட்டர் குறையாத வயது என்று எதைக் குறிப்பிடுகிறார்?
எந்த ஒரு மனிதர்களுக்கும் இளமையில் அபரிமிதமான சக்தியும், தேக ஆரோக்கியமும் குடி கொண்டிருக்கும் வயது வளர வளர இவைகள் குறைந்து கொண்டே போகும். அவ்வாறு வயது வளர்ந்தாலும் அதாவது முதுமை அடைந்தாலும், இளமையில் தம்மிடம் குடி கொண்டிருந்த அபரிமிதமான சக்தியும், தேக ஆரோக்கியமும் என்றென்றும் குறையாமல் அதே இளம் வயதில் உள்ளது போன்றே குறையாமல் இருக்க வேண்டும்.
அதற்கு கற்ற கல்வி ஒருபோதும் கலையாத கல்வியாக, நிரந்தர கல்வியாக, பயனுள்ளதாக தம்முள்ளேயே குடி கொண்டிருந்தால்…
அதாவது கலைமகள் கலையாத கல்வியாக நிரந்தரமாக தம்முள் இருந்தால், சக்திக்கு ஆதாரமான மலைமகளும், குறையாமல் தம்முள் விளங்குவாள் என்பதனை கருத்தில் கொண்டு அபிராமி பட்டர் முதலில் கலையாத கல்வியும் பிறகு குறையாத வயதும் கேட்கிறார்.
ஸ்ரீ குருப்யோ நமஹ, 🙏

