“அல்லாஹு அக்பர்”

அல்லாஹு அக்பர்” (அரபு: الله أكبر) என்பது ” கடவுள் மிகப் பெரியவர்” என்று பொருள்.

விளக்கம்: அல்லா- சிறந்த பிரார்த்தனையாக, தொடர்ந்த உற்சாகமாக, துன்பம் நேரும் போது அதை தீர்க்கும் சிறந்த யாழ் இசையாக, பிரமிப்பான தருணமாக, மனத்துடன் போராடி தீர்வு காணும் உற்ற ஆயுதமாக, – “ஹூ”  என்னும் இடைவிடாது அழைக்கும் இச்சப்தத்தின் மூலமாகத்தான், மிகப் பெரியவராக. தம்மை வெளிப்படுத்துகிறார். அதாவது “ஹூ”  என்னும் இச்சப்தத்தை தம்முள் இடைவிடாது முறையாக கையாளுபவர்களுக்கு மட்டுமே  அல்லாஹ் மிகப் பெரியவராகிறார்.

“ஆறுகொண்ட வாரியும் அமைந்துநின்ற தெய்வமும்
தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூபமும்
வீறுகொண்ட போனமும் விளங்குமுட் கமலமும்
மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே”.
என்று சிவவாக்கிய சித்தரும் தம் பாடலில்  “ஹூ”  என்று இடைவிடாது அழைக்கும் இப் சப்தத்தை முறையாக தம்முள் கையாண்டால்,  அது சிறந்த பிரார்த்தனையாக, தொடர்ந்த உற்சாகமாக, துன்பம் நேரும் போது அதை தீர்க்கும் சிறந்த யாழ் இசையாக, பிரமிப்பான தருணமாக, மனத்துடன் போராடி தீர்வு காணும் உற்ற ஆயுதமாக மாறி அதன் மூலம் சிவாயத்தின் அழிக்கும் தன்மைகள் யாவும் மறைந்து போகும் என்னும் பொருள்பட  இப்பாடலை இயற்றியுள்ளார்.

Consciousness (Pure Shivam/Allah) sleeps in minerals, dreams in plants, wakes up in animals, and becomes self-aware in humans.” —Rumi.

If someone repeatedly invokes the Pure Shivam as his consciousness in all three light states of sleeping, dreaming, and wakefulness with the sound of Hu (“Hu” means invoking in Sanskrit), like the incessant sound of Nataraja’s Udukkai, repeatedly the consciousness that exists in minerals, plants, and animals becomes self-aware within him and becomes immortal forever.

“தூய சிவம் அல்லது  அல்லாஹ் என்பது கனிமங்களில் தூங்குகிறது, தாவரங்களில் கனவு காண்கிறது, விலங்குகளில் விழிக்கிறது, மனிதர்களில் தன்னைப் பற்றி அறிந்து கொள்கிறது.” —ரூமி.

தூக்கம், கனவு மற்றும் விழிப்பு ஆகிய மூன்று ஒளி நிலைகளிலும், நடராஜரின் உடுக்கையின் இடைவிடாத ஒலியைப் போல, ஹு (சமஸ்கிருதத்தில் “ஹு” என்றால் அழைப்பது என்று பொருள்) என்ற ஒலியுடன் தூய சிவத்தை ஒருவர் தனது உணர்வாக மீண்டும் மீண்டும் அழைத்தால், தாதுக்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இருக்கும் உணர்வு மீண்டும் மீண்டும் அவருக்குள் தன்னைப் பற்றி அறிந்து கொள்கிறது மற்றும் என்றென்றும் அழியாததாகிறது.
திருச்சிற்றம்பலம், 🙏

Leave a comment