
“வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ:” மாணிக்கவாசகரின் திருவாசகம்:
மாணிக்கவாசகப் பெருமானின் வேண்டத்தக்கது எது என்பதை மாணிக்கவாசகரின் அறிவுதான் முதலில் அறியுமேயுன்றி, மாறாக அவர் இறைவன் எவ்வாறு மாணிக்கவாசகப் பெருமானின் வேண்டத்தக்கதை முதலில் அறிவான்?
“யார் என் அறிவாகிய ஒளியை தூண்டுகின்றாரோ அந்த சுடர் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக என்பது காயத்ரி மந்திரத்தின் பொருள்”. அதன்படி மாணிக்கவாசகனின் அறிவொளியை தூண்டும் பேரொளியாக , அதாவது மாணிக்கவாசகனின் அறிவுக்கு அறிவாகவே அவர் இறைவன் விளங்கிக் கொண்டிருப்பதால், மாணிக்கவாசகனுக்கு வேண்டத்தக்கது எது என்பதை, அவர் இறைவனே அவருக்கு முதலில் அறிவிக்கின்றபடியால், “வேண்டத்தக்கது அறிவோய் நீ” என்று இறைவனைக் குறித்து பாடியுள்ளார்.
அடுத்ததாக, மாணிக்கவாசகப் பெருமான் அவ்வாறு இறைவன் அறிந்த, அவனால் தமக்கு அறிவிக்கப்பட்ட வேண்டத்தக்கதையே, தாம் வேண்டுவதால், “வேண்ட முழுதும் தருவோய் நீ” அதாவது வேண்டிய முழுவதையும் தமக்கு தந்தே அருள்வாய் நீ என்று ஆணித்தரமாகவும் பாடியுள்ளார்.
திருச்சிற்றம்பலம்,🙏

