திருமூலர் திருமந்திரம் உரை எண் 981 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

“சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே”.

சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓத:
அவ்வே: இதில் அவ்- என்பது ஒரு சுட்டு சொல். வே: என்பது ஓர் உயிர்மெய் எழுத்து. அதாவது அவ்- என்னும் சுட்டுச் சொல், உயிரும் மெய்யும் கலந்த எழுத்தாக விளங்கிக் கொண்டிருக்கும் இம்மானுட உடம்பையும் சுட்டும் சொல்லாக இங்கு திருமூலர் பயன்படுத்தி உள்ளார்.

காரைக்கால் அம்மையாரும்   ”’எவ்வுருவும் அவ்வுருவே” என்று மானிட உருவை சுட்டிக்காட்ட அவ் என்னும் இப்.பதத்தை பயன்படுத்தி உள்ளார்

அவ்வும்உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே. என்பது சிவவாக்கிய சித்தரின் பாடல்

“உங்களுக்குள் ஒரு உயிர் சக்தி இருக்கிறது அதைத் தேடுங்கள்” என்பது சுபி ஞானி ஹஜ்ரத் ரூமி அவர்களின் கூற்று. அந்த உயிர் சக்தி என்பது உயிரும் மெய்யும் கலந்த மானுட யாக்கை வடிவமே ஆகும்.

அச்சக்தியோடு- சிவாய என்னும் மந்திரம் இரண்டற  கலக்கப்பெற்று, தெளிவடைந்து ஓதும் போது, அது மந்திர சக்தி கொண்டதாக ஆகிவிடும். அதாவது சிவாய நம என்னும்  இப் பஞ்சாட்சர மந்திரம், சக்தி கொண்டதாக, மந்திர சக்தி கொண்டதாக மாற, அதில் உள்ள ‘ நம’ என்னும் நாமத்தை  நாவினில் ஒடுக்கி, ( #ந_திரோதமலம், #ம_ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். “#நான்’ என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மாவை, நாவினில் ஒடுக்கி அதில் உள்ள திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து,)

“#சி_சிவம்; #வா_திருவருள், #ய_ஆன்மா, இப்பொருளை உள்ளடக்கிய சிவாய”  என்னும் நாமத்தை அவ்வே – என்னும் உயிரும் மெய்யும் கலந்த இம்மானுட யாக்கையோடு  வாசி வழியாக இரண்டற உள்கலந்து  ஓதித் தெளிய…

சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்
அவ்வாறு தெளிந்து இடைவிடாது ஓத ஓத சிவாயவொடு இரண்டற கலந்த அவ்வே- என்னும் இவ் உயிரும், உடம்பும்  சேர்ந்த மானுட யாக்கை  வடிவும், காரைக்கால் அம்மையார் பாடியபடி எவ்வுருவும் சிவனுரு வாகும்.

சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்:
இவ்வாறு சிவாயவொடு அவ்வும்- தம் மானுட யாக்கையையும், இரண்டற கலக்கச் செய்து தம்மை  சிவனுருவாகவே  ஆக்கித் தெளிய வல்லாருக்கு…

சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே:
சிவாயம் என்னும் சிவம் வேறு, அவ்வே என்னும் சக்தியின் அம்சமான மானுட யாக்கை வேறு என்று இல்லாமல், சிவ சக்தி சொரூபமாக, அர்த்தநாரீஸ்வரராக ஒன்றனவே விளங்கிக் கொண்டிருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம், 🙏