
பகவான் ரமண மகரிஷியிடம் ஒருமுறை கேட்கப்பட்டது, “நாம் மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும்?”
அவர், “மற்றவர்கள் என்பதே இல்லை” என்று பதிலளித்தார்.
இது எல்லோராலும் கடைபிடிக்கக் கூடிய ஒன்றா? அப்படியானால், அது எப்படி சாத்தியமாகும்?
ஆம், மனித வடிவம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொண்டால், அது எல்லா மனிதர்களுக்கும் சாத்தியமே!
மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து கூறுகளும் ‘சிவாம்சத்தில்’ உருவான பஞ்ச பூதங்கள் ஆகும்
‘வாசி’ என்பது மூச்சுக்கான தமிழ் வார்த்தையாகும், மேலும் இது சிவாம்சத்தின் ஒரு அங்கமாகும். இந்த ‘சிவமும், வாசியும்’ இணைந்த தன்மையே, சி-வாசி-வா(சிவாசிவா) என ஆயிற்று. அதுபோன்றே, ‘மனம்’ என்பதும் “செய்” என்னும் சக்தியின் கட்டளைமயமான வெளிப்பாடேயாகும். ஒவ்வொரு மனித உடலும் “பஞ்சபூதங்கள், சுவாசம் மற்றும் செய்” ஆகிய மூன்றின் கலவையால் உருவாக்கப்படுவதால், ஒவ்வொரு மனிதனும் சிவசக்தியின் வெளிப்பாடாகவே ஆகிறான்.
இவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும், தங்கள் உடல் அமைப்பைப் பற்றிய இந்த உண்மையை உணர்ந்தால், அவர்கள் அனைவரும் சிவசக்தியின் அம்சங்களாகவே விளங்குவார்கள். அதன் விளைவாக ஒவ்வொருவரும் தனக்கென கொண்ட, தனிப்பட்ட பெயர், வடிவம், செய்பவன் நான் என்னும் எண்ணம் மற்றும் பாலினம் போன்றவைகள் தேவையில்லாமல் போய்விடுகிறது. இவ்வாறு ‘தனித்துவம்’ அழியும்… மனிதர்களிடமிருந்து எதுவும் வெளிப்படாததால், இத்தகையோர் மற்றவர்களை பார்க்கும்போது தன்னைத்தானே பார்ப்பவர்கள் ஆகவும், மற்றவர்களோடு பேசும் போது தன்னோடு தான் பேசிக் கொண்டவர்களாகவும் ஆவதால் அங்கு இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி நிலவுகிறது.
இத்தகைய மகிழ்ச்சியானது இயல்பாகவே ஒவ்வொரு மனிதர்களிடமும் குடிகொண்டுள்ளது. அது ஒருவர் மற்றவரை பார்க்கும் போதும் பேசிக்கொள்ளும் போதும், தன்னைத் தானே பார்த்து, பேசிக்கொள்ளும் அனுபவமாகி அதுவே உள்ளூர மகிழ்ச்சியாகவும் அவர்கள் அறியாமலேயே அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது.
மேலும் சக்தியின் அம்சமான “செய் என்னும் தெய்வீக கட்டளை” எல்லா உயிரினங்களிடமிருந்தும் பிளவு படாத ஒரே கட்டளையாக வெளிப்படுவதை உணரும் போது, சரி, தவறு என்ற கேள்வி எவரிடமிருந்தும் எழவே எழாது!
“தவறு , சரி என்ற கருத்துக்களுக்கு அப்பால் ஒரு துறை இருக்கிறது. நான் உன்னை அங்கே சந்திக்கிறேன்”, என்பது சூபிஞானி ஹஜ்ரத் ரூமியின் கூற்று.
ஸ்ரீ குருப்யோ நமஹ, 🙏

