
”அணு” என்பது ஒவ்வொருவர் உடம்பிலும் குடி கொண்டிருக்கும் நுட்பமான ஒளி பொருந்திய உயிர் ஆகும். ‘ மானம்’ என்பதற்கு கணிப்பு என்று பொருள் உள்ளது. மனதில் எண்ணங்கள் எழாமல் கணிப்பு என்பது உருவாகாது.

அதாவது நுட்பமான ஒளி பொருந்திய அணு- (அனு)மானமாக, எண்ணங்களாக வெளிப்பட்டால்…

ரமண மகரிஷி எண்ணங்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “உங்கள் எண்ணங்களை நம்பாதீர்கள். நான் உடல் என்பது ஒரு எண்ணம். நான் மனம் என்பது ஒரு எண்ணம். நான் செய்பவன் என்பது ஒரு எண்ணம். கவலை என்பது ஒரு எண்ணம் மட்டுமே. பயம் என்பது ஒரு எண்ணம் மட்டுமே. மரணம் என்பதும் ஒரு எண்ணம் மட்டுமே.” அதாவது இவ்வாறாகவே ஒவ்வொருவரின் ஆன்மா (உயிர்) தோற்றமெடுக்கும்.

மாறாக ‘பூதி’ என்பதற்கு உடம்பு மற்றும் திருநீறு என்று பொருள் உள்ளது. அதாவது அணு-(அனு) மானமாக (கணிப்பாக) வெளிப்படாமல் இருந்தால்,

அணு- (அனு) உடம்பாகவே வெளிப்பட்டு,

அது “மந்திரமாவது நீறு” என்று திருஞானசம்பந்த பெருமான் பாடிய பதிகத்தின் படி, ஒவ்வொருவரின் உடம்பும் மந்திரமயமாகவே தோற்றமெடுக்கும்.
திருச்சிற்றம்பலம் 🙏

பைபிளின் பழைய ஏற்பாடு சங்கீதம் 32:7
நீர்( நுட்பமான ஒளி பொருந்திய அணு மயமான உயிர்) எனக்கு மறைவிடமாயிருக்கிறீர், என்னை நீர் இக்கட்டுக்கு (மானம் என்னும் கணிப்பு நிறைந்த எண்ணங்களில் இருந்து) விலக்கிக்காத்து, (பூதி என்னும் மந்திர மயமான) இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.)
ஆமென்.

