“The state of two different characteristics”

Epictetus was an exponent of Stoicism who says, “This is the state and characteristic of the unknower of his self: he never expects profit (good) or harm from himself, but rather from outsiders. This is the state and characteristic of the knower who knows himself: he expects all good and all evil from himself.”

What is self-knowledge? Self-knowledge refers to one’s own consciousness, and realizing their awareness is synonymous with knowing oneself. One who understands himself in this way has no expectations from others; thus, there is no harm. Conversely, an individual who lacks self-awareness places expectations on others, succumbs to deception, and consequently causes harm to himself.

Siddhar Peruman Thirumoolar mentioned the same concept in his poem,
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே
கெடுகின்றான்”, என்று!

“ஜோதிடத்தை நம்புபவர்கள் மற்றும் எதிர்பார்க்காதவர்கள்”


எபிக்டெட்டஸ் என்பவர் ஸ்டோயிசிசத்தின் ஒரு பிரதிநிதி,

அவர் கூறுகிறார் “தன்னை அறியாதவரின் நிலை மற்றும் பண்பு இதுதான்: அவர் ஒருபோதும் தன்னிடமிருந்து  நன்மை அல்லது தீமைகளை எதிர்பார்க்கவில்லை, மாறாக வெளியாட்கள் மற்றும் வெளிப்புறமிடமிருந்து எதிர்பார்க்கிறார்.
ஆனால் தன்னை அறிந்தவரின் நிலை மற்றும் பண்பு இதுதான்: அவர் எல்லா நன்மைகளையும் எல்லா தீமைகளையும் தன்னிடமிருந்தே  எதிர்பார்க்கிறார்.”

இதன் விளக்கம்:

தன்னை அறிதல் என்றால் என்ன?  தன்னை அறிதல் என்பது ஒருவரின் சொந்த தூய உணர்வைக் குறிக்கிறது, மேலும் அவர்கள் தம் விழிப்புணர்வை உணர்ந்துகொள்வது தன்னை அறிந்துகொள்வதற்கு ஒப்பாகும்.

இந்த வழியில் தன்னைப்  புரிந்து கொள்பவர்களுக்கு ஜோதிடர் போன்ற எதிர்காலத்தை கணிப்பதாக சொல்லக்கூடிய  வெளியாட்கள் மற்றும்

நவகிரகங்கள் போன்ற வெளிப்புறமிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை; இதனால், எந்தத் தீங்கும் இல்லை.

மாறாக, தன்னை அறியும் அறிவு இல்லாத ஒருவர் எதிர்காலத்தை கணிப்பதாக சொல்லக்கூடிய ஜோதிடர்கள் மற்றும் வெளியில் உள்ள கிரகங்கள் மீது அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்புகளை வைக்கிறார்,

பின் ஏமாற்றத்திற்கும் ஆளாகிறார், அதன் விளைவாக தனக்குத்தானே தீங்கும் விளைவித்து கொள்கிறார். 

இதையே சித்தர் பெருமான் திருமூலரும் தன் உரையில் இவ்வாறு கூறியுள்ளார்:
“தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை யறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை யறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே யர்ச்சிக்கத் தானிருந் தானே.” என்று!
திருச்சிற்றம்பலம், 🙏