“தொழுகையை நிரந்தரமாக்குங்கள்”

தொழுகையை விட்டவனின் நிலை என்ன என்பதை பற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். “நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமி டையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டு விட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று”.

ஆனால் “இடைவிடாது ஜெபியுங்கள்” என்று பைபிளும், தொழுகையை நிரந்தரமாக்குங்கள் என்று இஸ்லாமும், உறக்கத்திலும் விழிப்பிலும் இடைவிடாது கடைபிடிக்க வேண்டிய யோகமாகவே பகவத் கீதையிலும், ஒவ்வொருவருக்கும் தொழுதல் என்பது இடைவிடாத நிரந்தர தொழுகையாக இருத்தல் வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்கிறது.

இது எவ்வாறு சாத்தியமாகும்?
ஒருவர் இடைவிடாமல் இயங்கும் தம் பிராணனின் வழியாக மந்திர ஜெபமாக தொழுகையை இடைவிடாது நிலைநிறுத்த முயன்றாலும்…

மனம், புத்தி, உடம்பின் ஐம்புலன்கள், ஐம்பொறிகள் போன்றவைகள் பிராணங்களின் வழியாக செய்யப்படும் ஜெபத்தோடு பொருந்தவில்லையெனில், எல்லா மதங்களின் வேதங்களிலும் சொல்லி உள்ளபடி, அது முழுமையான மற்றும் இடைவிடாத ஜெபமாக அல்லது தொழுகையாக ஒருவருக்கு ஆக முடியாது.
இதை இடைவிடாத ஜெபமாக, தொழுகையாக ஒருவர் மாற்ற விரும்பினால், அவர்தம் பிராணனில் பிராணனை ஜெபமாக படைக்கும் அதே கணத்தில்…

மனத்தில் இடைவிடாது உதயமாகும் எண்ணங்களில், எண்ணங்களாக மந்திர ஜெபத்தையும், மற்றும் எண்ணங்கள் வழியாக தோன்றும் உருவங்களின் இயல்புகளில் அதனதன் இயல்புகளாகவும், தோன்றும் அறிவினில் அறிவாகவும்…

நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாசம், என்னும் பஞ்சபூதங்களின் தன்மைகளில் அதனதன் தன்மைகளாகவும், இவைகளின் கலவையால் உருவான உண்ணும் உணவுப் பொருள்களில் அதனதன் தன்மையாகவும்…

தோன்றும் வண்ணமயமான உலகங்களில் அதனதன் வண்ணங்களாகவும், அண்டங்களில் அண்டங்களாகவும், கோள்களில் கோள்களாகவும், சூரியனில் சூரியனாகவும், சந்திரனில் சந்திரனாகவும்…

சப்தத்தில் சப்தமாகவும், ஒளியில் ஒளியாகவும், அருளில் அருளாகவும், பிராணங்களோடு இரண்டற கலந்து ஜெபமாக ஜெபிக்கும் போது…

அங்கு இடையில் தடுப்பதற்கு என்று ஏதும் இல்லாமல் ஆகி விடுவதால், தங்கு தடையற்ற இடைவிடாத ஜெபமாக, நிரந்தர தொழுகையாக, உறக்கத்திலும் விழிப்பிலும் கடைபிடிக்கும் யோகமாக அது இயல்பாகவே ஆகிவிடுகிறது.
ஸ்ரீ குருப்யோ நமஹ, 🙏

Leave a comment