“தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை”

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயின் பெருமையைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை இது.

“தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை” என்பது அவ்வையின் கொன்றை வேந்தன் வாசகம்.
‘கோயில்’ என்பது ஆலயத்தின் கர்ப்ப கிரகத்தில் குடி கொண்டிருக்கும் இறைவனை குறிப்பது. அதுபோன்று ஒவ்வொரு தாயின் கர்ப்பப்பையும் கோயில் போன்றது தான். இத்தகைய பெருமைமிக்க  தாயின் கர்ப்பப்பையை அடைந்து, அதில் பத்து மாதங்கள் வாசம் செய்யும் ஒவ்வொரு குழந்தையும் பேரு பெற்றதுதான்.
எனினும் அவ்வாறு தாயின் வயிற்றில் உயிரானது வாசம் செய்யும் அந்த பத்து மாதங்களில், கோயிலில் குடி கொண்டிருக்கும் தெய்வத்திற்கு ஒப்ப, தெய்வீக பண்புகள் கொண்ட குழந்தையாக உருவாக்கும் முழு பொறுப்பும் அத்-தாயிடம் மட்டுமே உள்ளது. அவ்வாறு  உருவாகி, பிறந்து  வளர்ந்த பின், இத்தகைய தெய்வீக பண்புகள் தம்மிடம் குடிகொள்ள காரணமாக விளங்கிய அத்-தாயின் கர்ப்பவாசம் தமக்கு சிறந்தொரு கோயிலாக, அக்குழந்தையால்  பார்க்கப்பட்டு பின் அதுவே வணக்கத்துக்குரியதாகவும்  ஆகிவிடுகிறது. ஆகையால் இத்தகைய குழந்தைகளுக்காக சொல்லப்பட்டது தான் “தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை” என்னும் அவ்வையின் கொன்றை வேந்தன் வாசகம்.

எனினும் மேற்கூறியதற்கு மாறாக, கர்ப்பவாசத்தின் இப்பெருமையை உணராத ஒரு தாயினால் ஒரு குழந்தையானது பெற்றெடுக்கப்பட்டால், அது பிறந்து வளர்ந்த பின்பும் கூட, அதனிடம் இத்தகைய தெய்வீக பண்புகள் தோன்றாத காரணத்தினால், அத்-தாயானவள் போற்றுதலுக்கு உரியவளாக ஆக முடியாது.

” கோயிலில்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்” என்பதும் ஓர் உலக நீதி செய்யுள். அதாவது கோயிலாக விளங்க வேண்டிய  இத்தகைய கர்ப்பவாசத்தின் பெருமையை உணராத பெண்களின் கர்ப்பத்தில், உயிரானது சென்று குடி இருக்க வேண்டாம் என்னும் பொருள்பட உலக நீதிச் செய்யுள், குழந்தையாக பிறப்பெடுப்பதற்கு முன்பே உயிர்களையும் வலியுறுத்துகிறது.

ஸ்ரீ குருப்யோ நமஹ, 🙏

Leave a comment