“திருப்புகழில் ராமாயணம்”

1.”வானோர் உரைத்த தசரர்கொரு” என்னும் பாடல் வரியில் “த” என்னும் வார்த்தைக்கு நான்முகன் என்றும் ஒரு பொருள் உண்டு. அது பிரம்மனையே குறிக்கும். நான்முகன், ஸ்ரீராமனாக விளங்கும் திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றியதால், அதாவது நான்முகனுக்கு முன்பிருந்தே ஸ்ரீராம அவதாரம் எடுத்த திருமால் இருந்து கொண்டிருப்பதால்… அருணகிரிநாதர் தெரிந்தே தான் “த” இன்னும் பதத்தை இங்கு சேர்க்காமல் “தசரர்கொரு” என்று மட்டுமே பாடி இருக்கலாம்.

2.பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே … என்னும் பாடல் வரியில் “பச்சை புயல்” என்பதற்கு இரு விதமாகவும் பொருள் கொள்ளலாம். புயல் என்பது காற்று சம்பந்தப்பட்டது, அது உயிர் மூச்சாக ஆகும்போது நீங்காத பச்சை நிறம் கொண்டதாகத்தான் இருக்கும். “பச்சை புயல்” என்பதற்கு இறுதி காலத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும்போது அதுவும் “பச்சைப்புயல்” போலத்தான் இருக்கும். மற்றொரு பொருள் பச்சைமா மலைபோல் திகழும் திருமாலைக் குறிக்கும். அதாவது இறுதியாக வரும் “ஒரு நாள்” என்று எனத் தெரியாத அந்-நாளில், “பச்சை புயல்” அடிக்கும் போது, அதாவது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும் போது, அதே “பச்சை தன்மையுடன் விளங்கும் திருமாலே” மெச்சதகும் பொருளாக விளங்கும் ‘மால் மருகனாக’ முருகப்பெருமான், (பட்சம் என்றால் அன்பு என்று ஒரு பொருள் உண்டு), அன்புடன் வந்து ரட்சித்து “பச்சை புயல்” தாக்கா வண்ணம் காத்தருள்வான் என்பதாகவும் இதற்கு ஒரு பொருள் கொள்ளலாம்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment