திருமூலர் திருமந்திரம் உரை எண் 2008 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ, 🙏
பகவான் ரமண மகரிஷியின் அனுபவ உபதேசம் “இருப்பது, அதாவது புற கண்களால் காட்சியாக காண இயலாத மாறாத, நித்தியமான தூய உணர்வாக நாம் இருந்து கொண்டிருப்பது உண்மை;

மாறாக பார்ப்பது, அதாவது புறக் கண்களால் காணப்படும் தம் உருவையும் அதுபோன்றே ஏனைய உருவங்களையும் மாறும் காட்சிகளாக பார்ப்பதில், இத்தூய உணர்வானது  இருப்பதாக அறியாமையால் எண்ணிக்கொண்டிருப்பது உண்மையல்ல:”

அணுக்கள் சுமார் 99% வெற்று இடம் மற்றும் அவை பிரபஞ்சத்தின் 100% என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளத் தொடங்கும் போது, நீங்கள் பார்க்கத் தொடங்கலாம்: நீங்கள் ஒன்றுமில்லாதவர். பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனின் உருவும் மில்லியன் கணக்கான அணுக்களால் ஆனவை, ஆனால் அவை அனைத்தும் 99.999999999% வெற்று இடத்தால் வடிவமைக்கப்பட்ட, மறையும் தன்மை கொண்ட  உருவக் காட்சிகள் ஆகும். அவ்வகையில் நம்மை நாமே காட்சியாக பார்க்கும் வரை, நமக்கு நாமே உண்மை அல்ல!

மாறாக அணுமயமான தம் உருவில் உள்ள 99.999999999% வெற்று இடத்தைக் கடந்து, அதாவது காட்சியாக தன்னைத்தானே பார்ப்பது உண்மை அல்ல என்பதை அறிந்து, மீதமுள்ள அணுவில் அணுவாய் இருந்து கொண்டிருக்கும் ஆதிபிராணாகிய ஸத்குருவை, அவன் அருளாலேயே அணுகவல்லார் எவரோ? அவரே அத்- தூயஉணர்வுடன் ஐக்கியமாகி ஒன்றாகலாம், அதாவது இருப்பது மட்டுமே உண்மை என்று உணர்ந்து, நமக்கு நாமே உண்மையாக இருக்கலாம்!!


Hazrat Rumi, a Sufi saint, says that no prayer is complete without presence. It indicates that being present at all times is the only way to pray completely.
ஒரு சூஃபி துறவியான ஹஸ்ரத் ரூமி, இருப்பு இல்லாமல் எந்த பிரார்த்தனையும் முழுமையடையாது என்று கூறுகிறார். எல்லா நேரங்களிலும் இருப்பில் இருப்பதுதான் முழுமையாகப் பிரார்த்தனை செய்வதற்கான ஒரே வழி என்பதை இது குறிக்கிறது!!!

திருமூலரின் திருமந்திரம் உரை எண் 2008 க்கும் இதுவே சிறந்த விளக்கமாகவும் அமைகிறது.
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்(டு)
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்(கு)
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
திருச்சிற்றம்பலம் 🙏