
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
சங்கீதம் 55:22
எவர் ஒருவர் தனக்கு உண்மையாக இருக்கிறாரோ அவரே சிறந்த நீதிமான் ஆவார், மேலும் நீதிமான் என்று கர்த்தர் குறிப்பிடுவதும் அத்தகையவர்களையே!
தனக்கு உண்மையாக இருத்தல் என்பது ‘நான் இருக்கிறேன்’ என்னும் தன் இருப்புக்கு காரணமான, தன் உள்ளுணர்வாகவே விளங்கிக் கொண்டிருக்கும் கர்த்தரின் மீது மாறாத விசுவாசம் கொண்டிருத்தலே, ஒருவர் தனக்குத் தானே உண்மையாக இருத்தல் என்பதாகும். அவரே சிறந்த நீதிமானாக கர்த்தரால் கருதப்படுவார்.
இத்தகையவர்கள் மனோபாரம் ஏற்பட காரணமாய் இருக்கும் இவ்வுடம்பையும் அதன் செயல்பாட்டையும் ஒரு போதும் தன்னுடையதாகவோ அல்லது எல்லாவற்றையும் ‘நான் செய்கிறேன்’ என்றோ கருத மாட்டார்கள். மாறாக மனோ பாரத்தை, சுமை தாங்கியாக செயல்படும் கர்த்தரின் மீது வைத்துவிட்டு, தள்ளாட்டம் ஏதும் இல்லாமல் தாம் எய்தவேண்டிய இலக்கை நோக்கி கர்த்தரின் ஆதரவுடன் பயணித்துக் கொண்டிருப்பார்கள்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

