New testament-4

பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன், பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
மத்தேயு 16:19

ஒவ்வொரு மானுட உடம்பும் கோடிக்கணக்கான அணுக்களை கொண்டு பிராணவாயு என்னும் சூத்திரத்தினால் கட்டப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலான வார்த்தை என்னும் மந்திரத்துடன் கலந்த பிராணவாயு என்னும் சூத்திரத்தினால் இம்மானுட தேகம் கட்டப்பட்டிருந்தால்? பரலோகம் சென்ற பின்பும் அக்-கட்டுக்கள் விலகாமல் கட்டப்பட்ட படியே இருக்கும். அதன் மூலம் கர்த்தரால் மீண்டும் பிறக்காத நித்திய ஜீவனாக அது மாற்றப்படும்.

மாறாக வார்த்தை என்னும் மந்திரம் கலக்காமல் வெறும் பிராண வாயு என்னும் சூத்திரத்தினால் மட்டுமே பூலோகத்தில் இத்தேகம் கட்டப்பட்டிருந்தால்? பிராண வாயு இத்தேகத்தை விட்டு அகன்றவுடன், அதன் அங்கங்கள் இப்பூலோகத்திலேயே கட்டவிழிந்து போய்விடும். அவ்வாறே பரலோகத்திலும் அது கட்டவிழிந்து போய் காணப்படுவதால், கர்த்தரால் அதை மீண்டும் பிறவாத நித்திய ஜீவனாக மாற்ற இயலாது.
ஸ்ரீ குருப்யோ நமஹ, 🙏