-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 21ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்கானக் களிறு கதறப் பிளந்தஎம்கோனைப் புகழுமின் கூடலு மாமே. வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனை:எவ்வாறு வானில் சூழ்ந்துள்ள கருமேகங்கள் மழையாக பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொழிகிறதோ, அவ்வாறே ஒவ்வொருவர் உடம்பிலும் உயிர் வித்தாக இருக்கும் ஈசன், தேகம் சிவாலயம் என்னும் உபநிஷத் வாக்கியத்திற்கு ஏற்ப,உட்கொள்ளும் காற்று, நீர், உணவு இவைகளின் வழியாக இவ்வுடம்பை நாடிவரும் எண்ணற்ற தேவகணங்களுக்கு ஒப்பான உயிர் அணுக்களுக்கும்,…
