திருமூலர் திருமந்திரம் உரை எண் 236 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
“ஒன்றும் இரண்டும் ஒடுங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்குந் திருவுடை யோரே”. 

ஒன்றும் இரண்டும் ஒடுங்கிய காலத்து: ஒரு ஆணின் உடம்பிலிருந்து வெளிப்படும் கோடிக்கணக்கான உயிர் அணுக்களில் இருந்து,

இறைவனால் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அணுவில்,  இரண்டாவதாக அதில் ஒடுங்கிய மூச்சும், அதாவது அதாவது வாசியின் நாதமும், விந்துவும் கலந்து ஒடுங்கி,

ஓர் மானுட உருவாக தோன்றிய காலத்தில்…

நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்: நலமுடன் இருந்து பல நல்லுரைகளை பலருக்கு வழங்கினாலும்… அவையனைத்தும் இத்தகைய ஒடுக்கம் உள்ளவரை தான் நிகழும். ஒடுக்கம் நின்று போனால்  அதுவரை அவர்கள் பேசிய நல்லுரைகள் யாவும் அவர்களுக்கே பயனற்றதாய் போய்விடும்.

வென்று விளங்கும் விகிர்தனை: விகிர்தன்: என்பதற்கு கடவுள் மற்றும் மாறுபட்ட செயலினன் என்று பொருள்கள் உள்ளது. அதாவது ஓர் விந்தணுவில் இரண்டாவதாக ஒடுங்கிய வாசியை குருவருளால் தம் மாறுபட்ட செயல் மூலம் திருத்தி திருவாசியாக மாற்றி,  தம்மை மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு  உயர்த்தி, அதன் மூலம் தம்மையே தம்மால் வென்றவர்கள் ஆகி விளங்குபவர்களின்..


நாடுவர் சென்று வணங்குந் திருவுடை யோரே:
அதாவது வென்ற அத்தகையோர் வாசம் செய்யும் இடமானது, மற்றவர்களால் இயல்பாகவே ஈர்க்கப் பட்டு, அத்தகையோர் தாமே அவர்களை நாடிச்சென்று, அவர்களின் வழியாக தாங்களும் இறைவனின் திருவருளை   பெற்று உய்வடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்🙏