திருமூலர் திருமந்திரம் உரை எண் 46 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
அந்திவண்ணா அரனே சிவனே என்று
சிந்தைசெய் வண்ணம் திருந்தடியார் தொழ
முந்திவண்ணா முதல்வா பரனே என்று
புந்தி வண்ணன்எம் மனம் புகுந்தானே.

சிந்தைசெய் வண்ணம் திருந்தடியார் அந்திவண்ணா அரனே சிவனே என்று தொழ :
” செய்வனத் திருந்தச் செய்”  என்னும் அவ்வையின் ஆத்திச்சூடி சொல்லியது போல் தம் வாசியை திருவாசியாக திருத்தி செய்யும் அடியார் சிந்தனையுள் மட்டுமே காணப்படும் அந்தி வானத்து நிறம் போல செக்கச் சிவந்த செம்மேனி உடையவனே…

முந்திவண்ணா முதல்வா பரனே என்று:
இவ்வுடல் உருவாக்கத்திற்கு முன்பே தோன்றியது ஆதிமூலமான உயிர்வித்தே…என்று அறிந்து அவனைத் தொழ…

புந்தி வண்ணன்எம் மனம் புகுந்தானே:
அறிவுக்கு அறிவாய் விளங்கும் பரம்பொருள் அவ்வாறு தொழும் என் உள்ளத்திலும்  புகுந்து நின்றானே.
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment