திருமூலர் திருமந்திரம் உரை எண் 45 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை:
விதித்த விதிமுறைகளின் படி தான் இவ்வுலகம் இயங்குகின்றதே அல்லாமல் வேறு வகையில் அல்ல.
அதுபோன்றே ஒவ்வொரு உயிரும் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் அவரவர்களின் கர்ம வினைகளின் படி தான்  நடந்து கொண்டிருக்கிறது. அதாவது  ரமண மகரிஷி கூறியது போல் என் முயற்சிக்கினும் என்றும் நடவாது நடவாது,  நடப்பது என் தடை செய்யினும் நில்லாது.

துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்:
முயற்சி திருவினையாக்கும் என்னும் வள்ளுவர் குறளின் படி, கர்ம வினைகளின் பலன்களையும் தாண்டி ஒன்று முயற்சி செய்து நடக்கும் எனில் அது அவரவர்களின் முக்தியின் பொருட்டு முயல்வதே ஆகும்.  அவ்வகையில் ஜோதி வடிவாக ஒவ்வொருவர் உள்ளிருக்கும் சோதிப் பிராணை சென்றடையும் வழிதனை குருவருளால் அறியப்பெற்று அவ்வழியில் இடைவிடாது துதி செய்தால்…

பதிவழி காட்டும் பகலவன் ஆமே:
உள்ளிருக்கும் சுடர் ஒளி ஜோதியாகத் திகழ்கின்ற சிவத்தின் அருளால் கர்ம வினைகள் யாவும் சூரியனை கண்ட பனி போல் விலக, அம்-மதிப்படைத்தவனின் அருளால் விதியை வெல்லலாம்.
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment