
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
போற்றி என்பார் அமரர் புனிதன்அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன்அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன்அடி
போற்றி என்அன்புள் பொலிய வைத் தேனே.
போற்றி என்பார் மனிதர் புனிதன்அடி:
அத்தகைய புனிதனின் திருவடிகளை போற்றும் வழியை அறியாது, மாணிக்கவாசகப் பெருமான் தம் திருவாசகத்தில் சொல்லி உள்ளபடி, சொல்லிய பாட்டின் பொருள் உணராமல் மனிதர்கள் போற்றி…
போற்றி என்பார் அசுரர் புனிதன்அடி:
அதாவது மனிதர்கள் தாம் சொல்லிய பாட்டின் பொருள் உணராமல், வாய்ச் சொல்லால் போற்றி வல்லசுரர்களாகவும்,
போற்றி என்பார் அமரர் புனிதன்அடி:
வல்லசுரர்களும் அவ்வாறே தங்கள் வாய்ச் சொல்லால் போற்றி தேவர்களாகவும் மாறி மாறி பிறந்து இளைத்து கொண்டிருக்கிறார்கள்.
போற்றி என்அன்புள் பொலிய வைத் தேனே:
ஆனால் அத்தகைய புனிதனின் திருவடிகளை குரு அருளால் என் உள்ளத்தில் உள்ள அன்பின் வழியில், சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்த சொல்லால் போற்றி சிவமாய் என்னுள் பொலிய வைத்தேன்.
திருச்சிற்றம்பலம்🙏

