திருமூலர் திருமந்திரம் உரை எண் 43 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்து நின்றானே.

அரனடி சொல்லி அரற்றி அழுது:
சிவத்தின் திருவடியை காதலாகி கசிந்த சொல்லால் சொல்லும்போது இயல்பாகவே கண்களில் கண்ணீர் மல்கும்,

பரனடி நாடியே பாவிப்ப நாளும்:
அச்சொல்லை திருவாசியின் மூலம் இடைவிடாது துதிக்கும்போது, ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்னும் பழமொழிக்கு ஏற்ப, அது உடல் முழுவதும் பரவ,

உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு:
அத்தகைய இறை உணர்விலேயே ஊன்றி அதிலேயே லயித்து உலகில் மாயையில் இருந்து ஒதுங்க வல்லாருக்கு,

நிரன்அடி செய்து நிறைந்து நின்றானே:
இறைவனும் சுற்றத்தை எல்லாம் மறக்கச் செய்யும்   (நிரனடி என்றால் சுற்றம் ஏதுமில்லாத துறவறம் என்று பொருள்) துறவறம் அளித்து அதனால் வெறுமையான அவன் உள்ளம் முழுவதும் நிறைந்து நிற்பான்.
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment