திருமூலர் திருமந்திரம் உரை எண் 40 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.
குரைகழல்: குரை என்பது ஒலியையும், கழல் என்பது திருவடிகளையும் குறிக்கும். ஆக குரைகழல் என்பது ஒலி பொருந்திய திருவடிகள், அதுவே ஒலிகளுடன் கூடிய உள் மற்றும் வெளிமூச்சு ஆகவும் உள்ளது.
ஒருவர் தம் குரு அருளால் வாசியில் உள்ள குறைபாடு நீங்க பெற்று  திருவாசியாக,
பொன்னை புடம் போட்டால் வெளிப்படும் பிரகாசத்தை ஒத்த பேரொளியாக விளங்கும் உயிர்வித்தான உள்ளிருக்கும் ஈசனை…
தம் தேகத்தில் விளங்கும் ஐம்புலன்கள் மற்றும் ஐம்பொறிகள், மனம் புத்தி இவைகளோடு இணைந்து வாழ்த்த வல்லார்களின்…
தேகத்துக்குள் அவனும் புகுந்து உள்நின்று…புறஞ்சடம் செய்வான்: அதாவது இறந்து மீண்டும் மற்றொரு புற உடம்புக்குள் புகாவண்ணம் காத்தருள்வான்.
திருச்சிற்றம்பலம் 🙏