
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து
ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.
நாள்தோறும் நான் இறைவனான என் நந்தியை, எம் குருவாக இடைவிடாது சிந்தித்து இசையினால் ஏத்தும்போது, எம் குருவும் என் இசையோடு, தழல் போன்ற உஷ்ணமாக, என் உடல் உள்ளே இருக்கும் உயிரோடு ஒத்து என் அஞ்ஞான இருளை நீக்கி வானில் நிற்கும் பூரண சந்திர பிரகாசம் போன்று பேரொளியாக என்னுள் திகழ்கிறான்.
திருச்சிற்றம்பலம் 🙏

