
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி ஆர்ந்த சுடரன்ன
ஆயிர நாமமும் போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.
சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்:
வாசனை இல்லாத வெறும் கூந்தலில் வாசனைப் பொருட்களை வைத்து அரைத்த சாந்தை கலந்து பூசியவுடன் எவ்வாறு கூந்தல் கஸ்தூரி போல் மணக்கின்றதோ, அவ்வாறே மண்ணினால் ஆன வாசனையில்லாத உடம்பில்…
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி ஆர்ந்த சுடரன்ன:
அமரத்துவம் அடையப் பெற்றவர்களுக்கு ஈசனால் அருளப்பட்ட மெய்ந்நெறியான, ஆயிரம் சூரியர்களுக்கு ஒப்பான பேரொளி வீசும் ‘சிவாயநம’ என்னும் பஞ்சாட்சரம், குருவருளால் வாசியில் கலந்து, திருவாசியாக உடம்பில் சாத்தப்பட்டால் கிடைக்கப் பெறும் அமரத்துவத்தின் பெருமையை உணர்ந்த நான்…
ஆயிர நாமமும் போந்தும் இருந்தும் புகழுகின் றேனே:
ஆயிரம் ஆயிரம் ஆக அதாவது எண்ணிக்கையில் அடங்காததாக, உறக்கத்திலும் விழிப்பிலும் இவ்விரண்டுக்கும் இடையிலான கனவிலும், இடைவிடாது இவ் ஐந்தெழுத்தான ‘சிவாய நம’ என்னும் வாசனை நிறைந்த கலவையை, திருவாசியாக என் தேகம் முழுவதும் பூசிக்கொண்டு, போற்றியும், துதித்தும், புகழ்ந்துமாக இருந்து கொண்டிருக்கிறேன்
திருச்சிற்றம்பலம்🙏

