
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்:
பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள். பிறப்பு என்னும் சங்கிலித் தொடரை அழிக்கும் பேரருளாளன்:
இறந்தால் மீண்டும் மறுபிறவி உண்டு என்பது சனாதன தர்மத்தின் நியதி. அவ்வாறாயின் இறப்பில்லா பெருவாழ்வு அடைய பெற்றால்தான் மீண்டும் பிறவாமை என்று பேரு கிட்டும். அத்தகைய மரணமில்லா பெருவாழ்வை அருள்வதின் மூலம் மீண்டும் மீண்டும் பிறப்பு என்னும் சங்கிலி தொடரை அழிப்பவன்.
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே:
இத்தகைய பேரருளை ஒருவர் அடைய தொழுமின் தொழுதால்: அதாவது ஒரு தொழுதலுக்கும் மற்றொரு தொழுதலுக்கும் இடையே இடைவெளி என்பதே இல்லாமல் அடுத்தடுத்து இடைவிடாது அவனை தொழுது கொண்டே இருந்தால், அவ்வாறு துதிப்பவனை விட்டு சிவமும் ஒருபோதும் விலகாது, அதாவது அவனைத் எக்காலத்தும் துறக்காது, அதன் காரணம் நினைப்பும் மறப்புமாய் இருக்கும் மாயை திரை விலக,
“பிறிவேது இனி உனைப் பிடித்தனம் உனக்குநம் அறிவே வடிவெனும் அருட்பெருஞ்ஜோதி” இன்று வள்ளல் பெருமான் அகவலில் பாடி உள்ளபடி நம் அறிவே வடிவாக பிறிவற்று விளங்குவான்.
திருச்சிற்றம்பலம் 🙏

