திருமூலர் திருமந்திரம் உரை எண் 22 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே. 
மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்:
மனம் என்பது தொடர் நினைவலைகளைக் கொண்டது அவ்வாறு நினைப்பவனின் நினைவாக இருந்து கொண்டு அம்மனதை,  ‘மாயநன் நாடன்’  நாடன் என்றால் ஆளுபவன் என்று பொருள, மாயநன் நாடன்’ என்றால் கண்களுக்கு புலனாகாமல் நம் மனதை ஆண்டு கொண்டிருப்பவன்.
அவ்வாறு நினைப்பவனின் நினைவாகவே அவன் இருப்பதால், மனம் நினைப்பதை அவன் அறிவான் எனினும், மாயையின் வசப்பட்ட மனம் அவனை நினைப்பதில்லை மாறாக இறையருள் எனக்கு இல்லை, என் மேல் இறைவனுக்கு கருணை பிறக்கவில்லை என்று பேசுவர்.
ஆனால் இறைவனே எவர்கள் மரணம் இல்லா பெருவாழ்வை நாடி, மரணத்திலிருந்து தப்பிப் பிழைக்க நினைக்கின்றார்களோ, அவர்களுக்கு துணையாக அவர்கள் பக்கம் இருந்து அவர்களை காத்தருள்வான் என்பதே சத்தியம்.
திருச்சிற்றம்பலம் 🙏