
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தஎம்
கோனைப் புகழுமின் கூடலு மாமே.
வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனை:
எவ்வாறு வானில் சூழ்ந்துள்ள கருமேகங்கள் மழையாக பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொழிகிறதோ, அவ்வாறே ஒவ்வொருவர் உடம்பிலும் உயிர் வித்தாக இருக்கும் ஈசன், தேகம் சிவாலயம் என்னும் உபநிஷத் வாக்கியத்திற்கு ஏற்ப,
உட்கொள்ளும் காற்று, நீர், உணவு இவைகளின் வழியாக இவ்வுடம்பை நாடிவரும் எண்ணற்ற தேவகணங்களுக்கு ஒப்பான உயிர் அணுக்களுக்கும், இழிந்த பிறவி இல்லாத அமரத்துவம் கொடுத்து காத்து அருள்பவன்.
கானக் களிறு கதறப் பிளந்த:
அதன் மூலம் அவனே இவ் உடம்பில் உருவான ஆணவம் என்னும் மதம் கொண்ட யானையின் உடலை பிளந்து கரி உரி போர்த்த மூர்த்தமாக காட்சி தருபவன்.
எம்கோனைப் புகழுமின் கூடலு மாமே:
இப்படிப்பட்ட எம் இறைவனை பாடி பரவி பணிந்து போற்றினால் அவன் அருள் பெறலாம் அவனோடு இரண்டற கலக்கலாம்
திருச்சிற்றம்பலம்🙏

