திருமூலர் திருமந்திரம் உரை எண் 19 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
“இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே”. 

முது என்றால் அறிவு, அவ் அறிவிற்கு அறிவாக விளங்குபவன் மூதறிவாளன்.

விது என்றால் காற்றைக் குறிப்பது, அதாவது வாசியால் வாசி யோகம் பற்றிய அறிவை மூதறிவாளனால் முறையாக அறிந்து, பின் அதை அகர்மத்தில் கர்மமாக செய்பவனின் மெய்யை: உடம்பை,

அதுபதி: மூதறிவாளன் தன் நிரந்தர இருப்பிடமாக  ஆக்கிக் கொண்டு அமரும்போது,

இதுபதி: அவன் உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ராரம் என்னும் ஏழு சக்கரங்களும் தெய்வாம்சம் பொருந்திய தாகி, ஏலம் போல் வாசனையோடு ஒளிரும்.
திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment