திருமூலர் திருமந்திரம் உரை எண் 18 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. 

நிறைதவம் நோக்கி: நிறை என்றால் நூறு பலம் கொண்ட அளவு என்று பொருள். அதாவது ஒருவர் தம் வாசியில் நூற்றின் அளவு கொண்ட தவத்தை நோக்கி போகும் போது…

அளகை வேந்தனை: அளகை என்பது அளவு ஒன்பதை குறிப்பது. ஒவ்வொரு உடம்பின் உள்ளும் ஒன்பது வாசல் வைத்து,
அதிபதி: அதை அரசாட்சி செய்பவனை, நிதிபதி: காணலாம்.

ஆக்கமது ஆக்கின்: இவ்வாறு தவத்தின் பலன் கைகூடும் போது, உயிர் வெளியேறும் ஒன்பது வாசலும் ஒக்க அடைக்கப்பட்டு, அவனில் நாமும் ஒன்றாகி, 

அதுபதி ஆதரித்து இதுபதி கொள்என்ற எம்பெரு மானே:  பதி என்றால் இறைவன் என்று பொருள். அதுபதி ஆதரித்து: அவன் அருளால் அவன் ஆண்ட இத் தேகத்தை இதுபதி: நம்மை நாமே அவன் அருள் ஆதரவுடன் ஆண்டு கொள்ளலாம்.

“ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்”
திருநாவுக்கரசர் பதிகம்:
திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment