திருமூலர் திருமந்திரம் உரை எண் 16 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே. 

கோது என்றால் குற்றம் என்று பொருள். அர்த்தநாரீஸ்வரர்:  நாரீ என்பது சக்தியை குறிக்கும், அர்த்தம் என்றால் பாதி என்று பொருள்.  அதாவது ‘கொன்றைக் குழற்சடை மாது’  எனும் சக்தி வடிவான வாசிக்கு வலது பாகனான பின்பு தான், அதாவது பிரணவ சப்தத்தை வெளிப்படுத்தும் வலம்புரி சங்காக மாறிய பின்பு தான், உயிர்வித்தாய் விளங்கும் சிவம், கோது எனும் குற்றம் நீங்கப் பெற்று அர்த்தநாரீஸ்வரர் என்று போற்றப்படுகிறார்.

யாது என்பதற்கு அரக்கர்கள் அல்லது பிசாசு இன்று பொருள் உள்ளது
அர்த்தநாரீயின் பெருமை அறியாமல் அமரத்துவம் பெற்று தேவர்களாக ஆக வேண்டிய மனித பிறவிகள்…

யாது குலாவி: மரணத்திற்கு ஏதுவான வாசியின் இடது பக்கத்தோடு குலாவிய  குற்றத்திற்காக பிறவிப் பிணிக்கு காரணமான குணங்களை பயின்று கொண்டே இருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்🙏